உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதி கனமழை எச்சரிக்கை : 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு

அதி கனமழை எச்சரிக்கை : 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் 19ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்பதால், அவசரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம்.திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங் களுக்கு, கன மழை குறித்து வானிலை மையம் அறிக்கை அளித்து உள்ளது.இன்று முதல் வரும் 19 வரை இம்மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18, 19ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி; 19ல் தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.கனமழையால் அவசர நிலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராக இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டம் அதிராமபட்டிணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10.3 செ.மீ பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. .விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், உடனே தெரியப்படுத்த வேண்டும் என, கலெக்டர்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sandi Muni
மே 17, 2024 19:02

Water is most important for world


Kandhavel
மே 16, 2024 11:16

% Correct


Nagarajan D
மே 16, 2024 10:04

தமிழகத்திற்கு மழை மிக மிக அவசியம் எல்லா நீர்நிலைகளும் வற்றிவிட்டது வருண பகவானின் கருணையால் நீர்நிலைகள் நிறைந்து விவசாயம் சிறக்க வேண்டும் நமது அரசியல் வியாதிகள் எதற்குமே உபயோகமில்லாதவனுங்க காவேரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட்டால் கர்னாடக எல்லைக்கு சென்று ஆட்சியில் இருக்கும்/ இருந்தவனுங்க மலர்களை தூவி வணங்குவதாக சொல்லிவிட்டு வெள்ளம் வந்தால் எல்லா நீரும் கடலில் சென்று கலக்கவே விடுவானுங்க மிக அதிகமாக தடுப்பணைகள் காட்டினாலே இதற்க்கு உடனடி பலன் கிடைக்கும் பெரிய அணை கட்டி நீர் தேக்க எந்த திட்டமும் நமது தமிழக கட்சிகளுக்கு இல்லை இந்த வருடம் தேவையான மழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்க கடவுளை வணுங்குவோம்


Ravichandran S
மே 17, 2024 18:33

எவ்வளவு மழை பெய்தாலும் கடலுக்குள் அனுப்பி விடுவார்கள் மழைநீர் சேகரிப்பு எல்லாம் உடன் முடிந்துவிட்டது இனி மீதம் இருக்கிற மணல் மட்டும் கொஞ்ச நாள் இருக்கும்


angbu ganesh
மே 16, 2024 09:58

அப்படி அதி கன மழை பெஞ்சா அத தமிழ் நாட்டுக்குள்ளேயாவது இணைப்பு செஞ்சு தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் அதற்க்கு கண்டிப்பா வழி இருக்கும் ஆனா செய்ய மாட்டானுங்க இவனுங்களையே காலம் பூரா நம்பி இருக்கணும், இப்படி தன்னை காலம்தான் ஏமாற்றுவனுங்க


Siva Subramaniam
மே 16, 2024 09:13

கடந்த சில மாதங்களாக சொல்லிவந்த மழை இனிதான் வரவேண்டும் வானிலை அறிவிப்புகளும் அரசியல் ஆகிவிட்டன


மேலும் செய்திகள்







புதிய வீடியோ