உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுமான பொருட்கள் விலை உயர்வு; ஒழுங்குபடுத்த குழு அமைக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு; ஒழுங்குபடுத்த குழு அமைக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை; கட்டுமான பொருட்களின்விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை தடுத்து ஒழுங்குபடுத்த மாநில அளவில் குழு அமைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் பெரியகிளுவச்சி கந்தசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:அரசின் சிவில் கட்டுமான ஒப்பந்தப் பணியை மேற்கொள்கிறேன்.சிவகங்கை, புதுக்கோட்டையில் 'எம்' சாண்ட், கிராவல், கற்கள் உள்ளிட்ட பிற கட்டுமான பொருட்களின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை. குவாரிகளுக்கு வழங்கிய ஒப்பந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.பல்வேறு கட்டுமான ஒப்பந்த பணியை செயல்படுத்துவதில் ஒப்பந்ததாரர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.கட்டுமான பொருட்களின் முந்தைய விலை அடிப்படையில் தற்போதைய ஒப்பந்தப் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அரசு மற்றும் இதரதிட்டப் பணியை மேற்கொள்ள குவாரி பொருட்கள், இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை தடுத்து ஒழுங்குபடுத்த மாநில அளவில் குழு அமைக்க வேண்டும். அரசின் திட்டப் பணியை நிறைவேற்ற ஏலத்தில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்களுக்கு விலை உயர்வு பற்றி முன்னறிவிப்பு செய்யக்கோரி தமிழக கனிமவளத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு கனிமவளத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், சிவகங்கை, புதுக்கோட்டை கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தற்போதைய நிலை குறித்து மார்ச் 25 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ