உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முக்கிய இடத்தில் சிவாஜி சிலை உயர் நீதிமன்றம் வைக்க உத்தரவு

முக்கிய இடத்தில் சிவாஜி சிலை உயர் நீதிமன்றம் வைக்க உத்தரவு

மதுரை:'மாநில நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின்றி திருச்சியில் நிறுவப்பட்டுள்ள மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளதை அகற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், சிலையை நிறுவலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திருச்சி மோகன் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'திருச்சி பாலக்கரை ரவுண்டானா மூலையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. மூடி, மறைத்து வைக்கப்பட்டுள்ள சிலையை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டார்.அந்த மனுவை, நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.அரசு தரப்பில், 'சாலைகள், நடைபாதைகளில் சிலையை நிறுவக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி: அனுமதி இல்லாததால் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மாநிலத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிவாஜி கணேசன் சிலையை வைத்து காட்சிப்படுத்தலாம்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை