உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக ஆட்சியில் அதிக கடன்: தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு

அதிமுக ஆட்சியில் அதிக கடன்: தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: அதிமுக ஆட்சியில் அதிக கடன் வைத்து விட்டு சென்றனர் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசுகையில் குறிப்பிட்டார்.சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து, உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: அனைவரும் சமம் என கூறுவதே திராவிட மாடல் அரசு. நீட் தேர்வு இல்லை என்று தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னார். 31 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி வென்றால் ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும். இ.பி.எஸ்., மூலம் தான் தமிழகத்திற்குள் நீட் தேர்வை மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.

அதிக கடன்

ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை வெற்றி பெற செய்ய வேண்டும். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நான் மட்டும் தான் ஆறுதல் கூறினேன். அதிமுக ஆட்சியில் அதிக கடன் வைத்து விட்டு சென்றனர். அதிமுக அதிக கடன் வைத்துச் சென்றாலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. திமுக, காங்கிரஸ் தான் நீட் தேர்வு கொண்டு வர காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

குமரி குருவி
ஏப் 08, 2024 07:09

முன்னாள் தி.மு.க.நிதியமைச்சர் சொன்ன அந்த முப்பதாயிரம் கோடிகள் எங்கே....?


raja
ஏப் 07, 2024 21:33

பாரு தமிழா எப்படி எல்லாம் திருட்டு திராவிட ஒன்கொள் கொல்லைகூட்ட கோவால் புற கட்டுமர மூன்றாம் தலைமுறையும் உன்னை ஏமாற்றுகிறது அவங்க பத்து ஆண்டு ஆட்சி செய்து மொத்தமாவே அயிந்து லட்சம் கோடி தான் கடன் வட்சானுவோ ஆனா இந்த திருட்டு கூட்டம் மூனுவருடம் ஆண்டு வருசத்துக்கு ஒரு லட்சம் கோடின்நு இப்போ மொத்தம் எட்டு அரை லட்சம் கோடியா நிக்குது


Bhakt
ஏப் 07, 2024 21:07

அவங்க எவ்வளவு கடன் வாங்கினாங்க? நீங்க எவ்வளவு கடன் இதுவரை இந்த மூன்றாண்டில் வாங்கிக்கீறிங்க?


ஜஜ
ஏப் 07, 2024 20:29

எப்ப 15 லட்சம் கொடுக்கிறேன் என்று மோடி சொன்னார் ஏன் எத்தனை முறை அதற்கு விளக்கம் சொல்லி யாச்சு


SIVAKUMAR
ஏப் 07, 2024 19:15

உங்க ஆட்சியில எல்லா கடன்களையும் தீர்த்திட்டீங்களா சொல்லுங்க பார்க்கலாம்


Anbuselvan
ஏப் 07, 2024 18:54

அதிமுக ஆட்சியில் அதிக கடன் ஆனால் இப்போது அதை விட அதிக கடன் கடனில்லா தமிழ்நாட்டை உருவாக்க தேசிய ஜனநாயக முன்னணிக்கு மக்கள் வாக்கு அளிப்பார்களா ?


ஆரூர் ரங்
ஏப் 07, 2024 18:52

கருணா இதே செல்வகணபதி மீது சுடுகாட்டுக் கூரை ஊழல் குற்றச்சாட்டு கூறி பிரச்சாரம் செய்தார். பேரன் ஆதரித்துப் பிரசாரம். மக்களை அறிவிலிகள் என நினைத்து விட்டார்களா ?


Duruvesan
ஏப் 07, 2024 18:20

சரி விடியளு எவ்வளவு கடன் அடைத்தார் என்று சொல்லு


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி