உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எமிஸ் தளத்தில் ஹிந்திக்கு முதலிடம்

எமிஸ் தளத்தில் ஹிந்திக்கு முதலிடம்

சென்னை:தமிழக பள்ளிக்கல்வி துறையின், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு நிர்வகிக்கும், 'எமிஸ்' இணையதளத்தில், ஹிந்திக்கு முதலிடம் தரப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பள்ளிக்கல்வி துறை சார்பில், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் செயல்பாடுகள், எமிஸ் இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், மாணவர்களின் விபரங்கள் பக்கத்தில், தாய் மொழி என்ற பகுதியில், முதலில் ஹிந்தி உள்ளது. தமிழுக்கு ஐந்தாம் இடம் அளிக்கப்பட்டுஉள்ளது. இந்த விபரம், உலக தாய்மொழி தினமான நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை