உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுச்செயலர் பழனிசாமி என எப்படி குறிப்பிடலாம்: ஐகோர்ட்

பொதுச்செயலர் பழனிசாமி என எப்படி குறிப்பிடலாம்: ஐகோர்ட்

சென்னை:'பொதுச்செயலர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் என குறிப்பிட்டு, எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும்' என, பழனிசாமி தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி, ''இணை ஒருங்கிணைப்பாளர் என, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துவிட்டு, தற்போது, பொதுச்செயலர் பழனிசாமி என பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.இதையடுத்து, 'வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவ்வாறு எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும்' என, பழனிசாமி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். திருத்த மனுவுக்கு பதிவுத்துறை எப்படி எண் வழங்கியது என்பதற்கு விளக்கம் அளிக்கவும், நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஆகஸ்ட் 7க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி