உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம் ஜெம் விழாவில் அண்ணாமலை பேச்சு

நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம் ஜெம் விழாவில் அண்ணாமலை பேச்சு

கோவை:'ஜெம்' பவுண்டேஷன் சார்பில், ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலுவின் சுயசரிதை புத்தகம், 'கட்ஸ்' வெளியீட்டு விழா, கோவை நீலாம்பூரில் உள்ள ஹோட்டலில் நடந்தது.புத்தகத்தை, டாடா குழும தலைவர் சந்திரசேகரன் மற்றும் முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், டாக்டர் பழனிவேலுவின் பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி ஆகியோர் வெளியிட்டனர்.விழாவில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''பெரும் ஞானம் இருந்தால் மட்டுமே, நல்ல மனிதனாக மாற முடியும். நேர்மை இருந்தால் எதையும் சாதிக்க முடியும். வாழ்க்கையை எளிமையாக நடத்தினால், சாதனைகள் தேடி வரும். எதையும் எதிர்த்து கேட்கும் போர் குணம் வேண்டும்,'' என்றார்.டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பேசுகையில், ''நம் வாழ்வில் பெரும்பாலான விஷயங்களை, நாம் தீர்மானிக்க முடியாது. நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை நம் முயற்சியால், சாதகமாக மாற்றி வெற்றி பெற வேண்டும். உங்கள் குணம் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும்,'' என்றார்.விழாவில், ஜெம் மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் பிரவீன்ராஜ் வரவேற்றார். டாக்டர் பழனிவேலு ஏற்புரை வழங்கினார். அமைச்சர்கள் சுவாமிநாதன், சக்கரபாணி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, காமராஜ், பா.ம.க., தலைவர் அன்பு மணி, த.மா.கா., தலைவர் வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

jeyakumar
ஜூலை 28, 2024 21:17

இப்படியே சொல்லி சொல்லி நேர்மையாய் இருந்து இருந்த இடம் தெரியாம போறதுக்கு, நேர்மைஇல்லாமல் இருந்தால் நல்லா ஜாம் ஜாம் ஆ நாலுபேருக்கு தெரியும் படி நல்லா வாழலாம்னு எல்லோருக்கும் தெரியும் அரசாங்க ஊழல் வாதிகள் எப்படி இருகன்னுங்க அது மாதிரிதான்.


P.Sekaran
ஜூலை 28, 2024 11:19

காமராஜர் தோத்தாரே அவர் நேர்மை இல்லாதவரா தோற்பதும் ஜெயிப்பதும் பணத்தால் தான் என்று கண்கூடாக தெரிகிறது. 2026 தேர்தலிலும் பணத்தை வைத்து ஜெயித்துவிடுவார்கள். திராவிட மாடல் ஆட்சி அதனிடம் நேர்மை இல்லை பணம் இருக்கிறது இதுதான் யதார்தம்.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 28, 2024 10:37

மிஸ்டர் அண்ணாமலை நீங்கள் நேர்மையானவரா? உண்மை சொல்லுங்கள் பார்ப்போம்.யாத்திரை போனீர்களே அதற்கு பணம் எப்படி வந்தது. யார் யார் கொடுத்தார்கள்? எப்படி கொடுத்தார்கள்,,?


Mario
ஜூலை 28, 2024 09:58

பாவம் இவர் நேர்மை இல்லாதவர் அதனால் தான் அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இன்னும் தோல்வி அடைவார்


M Ramachandran
ஜூலை 28, 2024 09:20

அப்போ ஸ்டாலின் சாதனைகள் பல செய்துள்ளாரெ. ரெட் ஜெயண்ட் முதலாலியம் பல சாதனைகள் புரிந்து வருகிறாரெ அவர்களெனல்லாம் நேர்மையுடனா சாதனைகள் புரிந்துள்ளார்கள் என்பது கேள்வி


Matt P
ஜூலை 28, 2024 07:17

நேர்மை இல்லாட்டியும் சாதிக்கலாம். திமுக காரங்க கிட்ட சொல்லுவாங்க எப்படின்னு.


Senthoora
ஜூலை 28, 2024 07:45

முதலில் இவரு நேர்மையானவரா?


P Sundaramurthy
ஜூலை 28, 2024 06:47

அப்படியென்றால் உங்கள் தேர்தல் தோல்வி ....?


மேலும் செய்திகள்