உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலை கிடைக்கும் என்றால் எல்லாரும் ஹிந்தி படிப்பர்: திருமாவளவன்

வேலை கிடைக்கும் என்றால் எல்லாரும் ஹிந்தி படிப்பர்: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''ம.பி., - உ.பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் தாய்மொழியை சிதைத்து, ஹிந்தி பேசும் மாநிலங்களாக மாற்றப்பட்டு விட்டன. அனைத்து மாநிலங்களையும் அப்படி மாற்ற வேண்டும் என்பதுதான் பா.ஜ., நோக்கம்,'' என வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவரது பேட்டி:

தாய் மொழியோடு ஆங்கிலத்தையும் கற்று, இரு மொழி கொள்கையில் செயல்படுவதுதான் சரியானதாக இருக்கும். இரு மொழிக் கொள்கை, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பொருத்தமானது. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மொழி என்பது, அவரவர் விருப்பம். இந்தியாவில் ஒரே மதம் என்ற நோக்கம் இருப்பதுபோல், ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை ஒரே தேசமாக வைத்திருக்க முடியும் என்ற எண்ணம், டில்லியில் ஆட்சிக்கு வருபவர்களின் நோக்கமாக இருக்கிறது; அதனால்தான் ஆங்கிலத்தை அன்னிய மொழி போல் வெறுப்பை பரப்புகின்றனர். ஹிந்தியை விரும்பி படிப்பவர்கள் படித்துக் கொண்டு இருக்கின்றனர். ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்பு உறுதிப்படும் என்றால், படிப்பதை யாராலும் தடுக்க முடியாது; வேலை வாய்ப்பு கிடைக்கும் எனில் , தமிழகத்தில் உள்ளவர்கள் கூட ஹிந்தி படிப்பர். ஆனால், அப்படி யாரும் இங்கு படிக்கவில்லை.ம.பி., - உ.பி., ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் தாய்மொழியை கடுமையாக சிதைத்து விட்டனர்; ஹிந்தி பேசும் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதைபோல் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் மாற்ற வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சிறுத்தை
மார் 15, 2025 16:58

அய்யா உங்களைவிட எனக்கு மிக மிக தமிழ் நன்றாக தெரியும். உங்க பதவியை ராஜினாமா செய்து எனக்கு அளித்து தமிழ் தெரிந்திருக்கும் எனக்கு வேலை வாய்ப்பை வழங்கி புதிய புரட்சியை தொடங்கி வைக்கவும்.


orange தமிழன்
மார் 15, 2025 16:15

சரி சரி..... த வெ க அல்லது அதிமுக வா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.....


பேசும் தமிழன்
மார் 15, 2025 13:06

எல்லாம் சரி.... இரு மொழி கொள்கை தான் வேண்டும் என்று கூறும் உங்கள் கூட்டாளிகள்..... தங்களது பிள்ளைகளை எந்த பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.... எத்தனை மொழியில் படிக்கிறார்கள் என்ற உண்மையை சொல்ல வேண்டியது தானே ????..... உங்களுக்கு வந்தா ரத்தம்..... அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி.... அப்படி தானே ???


ManiK
மார் 15, 2025 10:25

உபி, பிகார் பற்றி திருமால்-வளவன்க்கு என்ன கவலை?? தேவையில்லாமல் மக்களை குழப்ப முயற்சிக்க வேண்டாம்


எவர்கிங்
மார் 15, 2025 10:05

ப்ளாஸ்டிக் சேரின் ஸ்ருதி மாறுதே


B MAADHAVAN
மார் 15, 2025 09:57

ஊருக்கு உபதேசம் செய்யும் ஏமாற்று பேர்வழிகள் கூட்டம் மட்டும் தங்கள் பள்ளிகளில் ஹிந்தி சொல்லித் தருவதையும், தங்கள் குடும்பத்தினர் மட்டும் ஹிந்தி கற்பதையும் கொள்கையாகக் கொண்டுள்ளனர். ஒரு பொய்யை 1000 முறை 1000 பேர் சொல்லும்போது உண்மை போன்ற எண்ணத்தை உண்டுபண்ணும். அது போல் ஒரு தீயக் கூட்டம் ஒன்று விடாமல் சொன்னதை சொல்லியே தங்கள் தவறை ஒத்துக் கொள்ளாமல், நாட்டை கெடுக்க முயற்சிக்கிறது. மக்கள் தான் தங்களது மூளையை உபயோகப் படுத்தி நல்லதை உணர்ந்து தங்களை மட்டுமல்ல நம் தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டும். காலம் கலி காலம். பொல்லாதவர்கள் பலர் உள்ளனர்.


saravan
மார் 15, 2025 08:32

அய்யா, வேலை என்றுமே கிடைக்காது...அப்படியே இடஒதுக்கீடு, பரிந்துரைகளின் பேரில் வேலை கிடைத்தாலும், அவ்வேலையால், நாடு வளர்ச்சி அடையாது...என்றுமே, அரசை நம்பாமல், தலைசிறந்த வேலைகள் நம்மை தேடி வரும் வகையில், நமது தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்...அதற்கான ஒரு கூடுதல் வழி மட்டுமே பல மொழிகளை கற்பது...இதனால் மட்டுமே வேலை கிடைத்து விடாது...உங்க ஆளுங்களுக்கிட்ட இதை விளக்கி சொல்லுங்க...அதற்கான, பயிற்சிகளை உங்கள் கட்சி சார்பில் நடத்தி உங்கள் சமுதாயத்தை முன்னேற்ற உதவுங்கள்...அதை விடுத்து, இதில் அரசியல் செய்யாதீங்க பிளீஸ்...நல்ல தகுதி உள்ளவனை, இட ஒதுக்கீடு காரணமாக ஒதுக்கி வைப்பதும், வெளிநாட்டில் அவன் சாதித்த பிறகு, அவனை உரிமை கொண்டாடுவதும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது...தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் மிஸ்டர் திருமா...


अप्पावी
மார் 15, 2025 07:17

இந்தி படிக்கச் சொல்வது உங்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்கு அல்ல. வடக்ஜன்ஸ் இங்கே வரும்போது அவிங்க பேசுவதை புரிஞ்சிக்குட்டு அவிங்களுக்கு சேவை செய்யணும். அதே மாதிரி நீங்க வடக்கே போனா அவிங்க கிட்டே இந்தில பேசி பானிபுரி வாங்கி சாப்புடவும் தான். இது என் சொந்த அனுபவம். கொஞ்சம் கொஞ்சமா தமிழ், தெலுங்கு, கன்னடம் எல்லாம் ஒழிஞ்சிரும். ஏக் நேஷன். ஏக் ஹி பாஷன் தான். ஜாவ் ஜாவ் தான்.


NellaiBaskar
மார் 15, 2025 07:09

அது எல்லாம் இருக்கட்டும் கோக்கு மாக்கு கோபாலு முதல்வர் வீட்டிலும் அவர்கள் உறவினர் வீடுகளிலும் தமிழ் ஆங்கிலம் இல்லாமல் மூன்றாவதாக தெலுங்கு பேசுகிறார்களே அது ஏன் ?


NellaiBaskar
மார் 15, 2025 07:03

ஹிந்தி படிக்க விரும்பும் மாணவர்கள் படிக்கட்டுமே அரசியல் வாதிகளுக்கு என்ன பிரச்சினை ? அரசு பள்ளிகளில் ஹிந்தி வேண்டாம் தனியார் பள்ளிகளில் வேண்டும் இது என்ன நியாயம் ? இது தான் அநியாயம் ! இது தான் அம்பேத்கர் சொன்ன சமத்துவமா ?


புதிய வீடியோ