உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமான வரித்துறை விசாரணைக்கு தி.மு.க., - எம்.பி., ஆஜராக உத்தரவு

வருமான வரித்துறை விசாரணைக்கு தி.மு.க., - எம்.பி., ஆஜராக உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் தரப்புக்கு விலக்கு அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கதிர் ஆனந்த் அல்லது அவரது வழக்கறிஞர், அதிகாரி முன் ஆஜராக உத்தரவிட்டது.கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், வேலுார் தொகுதியில் தி.மு.க., சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பறிமுதல்

தேர்தலின்போது, வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், தாமோதரன் - விமலா தம்பதியர் வீட்டில் நடந்த சோதனையில், 11.48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.பிடிபட்ட தொகை, கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என, அவருக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ், வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்த விசாரணைக்கு, வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, விசாரணை அதிகாரி 'நோட்டீஸ்' அனுப்பினார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், கதிர் ஆனந்த் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி சுவாமிநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆதாரம்

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கும், கதிர் ஆனந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதாரம் இல்லாமல், அவரை வழக்கில் இணைத்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து, அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்றார்.இதையடுத்து, விசாரணை அதிகாரி முன், மனுதாரர் அல்லது அவரது வழக்கறிஞர் ஆஜராகும்படியும், இறுதி உத்தரவு எதுவும் அதிகாரி பிறப்பிக்கக் கூடாது எனவும், நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். விசாரணையை, ஜூன் மூன்றாவது வாரத்துக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
மே 26, 2024 09:46

அபிடவிட்டில் துரைமுருகன் வேறு. D. துரைமுருகன் வேறு என்று குறிப்பிட்டதை நீதித்துறையை கேலி செய்வது போல இல்லையா?


GMM
மே 26, 2024 07:48

பறிமுதல் செய்யப்பட்ட தொகை கதிர் ஆனந்துக்கு தொடர்பு இல்லை என்று வழக்கறிஞர் கூறும்போது, யாருக்கு சொந்தம் என்று அறிந்து இருக்க வேண்டும்? இதில் வழக்கறிஞர் ஆஜர் ஆவதற்கு சட்ட பிரச்சனை இல்லை. திருட்டு, ஏமாற்று வேலை? கதிர் தான் ஆஜராக வேண்டும். வருமான வரி அலுவலர் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. நிர்வாக உத்தரவு மாறுபட்டு இருந்தால், நீதிமன்றம் நிறுத்தலாம் அல்லது ரத்து செய்ய முடியும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை