மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago
சென்னை:தமிழக அரசில், மத்திய பணி தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, வீட்டு வாடகைப்படி யை, 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி, ஜன., 1 முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய நகரங்கள், 'எக்ஸ், ஒய், இசட்' என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 27, 18, 9 சதவீதம், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிட்டு, வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது. தற்போது வீட்டு வாடகைப்படியை, முறையே 30, 20, 10 சதவீதம் என, மத்திய அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசின் மத்திய தொகுப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, வீட்டு வாடகைப்படியை உயர்த்தி, கடந்த ஜன., 1 முதல் கணக்கிட்டு வழங்க, தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை மட்டும் 'எக்ஸ்' வகை நகர பட்டியலில் உள்ளது.
5 hour(s) ago | 4
15 hour(s) ago | 1
16 hour(s) ago