மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
3 hour(s) ago
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் தமிழகப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றமும் 878 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 26.2 மி.மீ., பெரியாறில் 48.6 மி.மீ.,மழை பதிவானது. இதனால் 1048 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டமும் உயர்ந்து 118.55 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 2366 மில்லியன் கன அடியாகும். இதனால் தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக திறக்கப்பட்டிருந்த 527 கன அடி நீர் நேற்று காலையில் இருந்து 878 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.இந்நிலையில் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 46 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 79 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது.
3 hour(s) ago