உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி பேனா நினைவு சின்னம் தமிழக அரசே ஆய்வு செய்வது சரியா?

கருணாநிதி பேனா நினைவு சின்னம் தமிழக அரசே ஆய்வு செய்வது சரியா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கருணாநிதி பேனா நினைவு சின்னம் திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசிடமே, அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு நடத்த சொல்வது நியாயமானதா' என, மத்திய அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.'சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரை, கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதி என, மீன்வள துறை அறிவித்துள்ளது. இந்த கடற்கரை பகுதியில், புயல், சுனாமிக்கு வாய்ப்புள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mdluu5gm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் உள்ளிட்ட, எவ்வித கட்டுமானங்களையும் அனுமதிக்க கூடாது' என, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அனுமதி

அதை விசாரித்த தீர்ப்பாயம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு, மத்திய,- மாநில சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றத்துறை செயலர்கள், தமிழக தலைமை செயலர்.சென்னை மாநகராட்சி ஆணையர், பொதுப்பணி, மீன் வளத்துறை செயலர்கள், சென்னை கலெக்டர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:சென்னை மெரினா அருகே கடலில், கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க, 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதில், 'பேனா சின்னம் அமைப்பதால், கடலரிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை ஆய்வு செய்து, மத்திய சுற்றுச்சூழல் துறை மண்டல அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்பதும் ஒரு நிபந்தனை.

நியாயமாக இருக்குமா?

பேனா நினைவு சின்னத்தை செயல்படுத்தும் தமிழக அரசிடமே, திட்டத்தால் கடல் அரிப்பு ஏற்படுமா என ஆய்வு நடத்த, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவரே, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினால், அது வெளிப்படை தன்மையுடன் நியாயமானதாக இருக்குமா? கட்டுமான பணிகள் நடந்த பின் பாதிப்பு கண்டறியப்பட்டால், மத்திய அரசு என்ன செய்யும்?எந்தவொரு திட்டமாக இருந்தாலும், இனி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையே ஆய்வு நடத்தி, அதற்கான செலவை, திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். ஏற்கனவே, மத்திய அரசு விதித்த நிபந்தனையின் படி, தமிழக அரசு விரைந்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை, வரும் அக்டோபர் 30-ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Arachi
செப் 11, 2024 01:30

கடலுக்குள் தான் லிபர்ட்டி சிலை இருக்கு. பேனா வாளைவிட சக்தி வாய்ந்தது. திருவள்ளுவருக்கு கடலில் இருக்கும் பாறையில் சிலை. சுனாமியால் அடித்து செல்லப்பட்டவில்லை. ஆனால் எத்தனையோ கோடியில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து நொருங்கி சுக்குநூறாக உடைந்தது. ஆனால் பேனா பேசும் இந்த உலகம் உள்ளவரை.


ஆரூர் ரங்
செப் 10, 2024 15:33

சமாதிக்கு தயிர்வடை படையல் வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து எதுவுமில்லை என தமிழக நிபுணர் குழு அறிக்கை கொடுத்துள்ளது.


kulandai kannan
செப் 10, 2024 14:47

சீமான் இருக்கக் கவலை ஏன்?


God yes Godyes
செப் 10, 2024 11:15

பலே ஷோக்கா கீது.


M Ramachandran
செப் 10, 2024 10:08

தானெ ராஜா தன் ........ மந்திரி. கண்துடைய்யப்பு திராவிட மாடல் நாடக கம்பென்னி


RAMAKRISHNAN NATESAN
செப் 10, 2024 09:40

கருணாநிதி பேனா நினைவு சின்னம் திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசிடமே, அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு நடத்த சொல்வது நியாயமானதா என, மத்திய அரசுக்கு ........... கூட்டணி உறுதியாயிட்டா பாஜக தமிழகம் நாசமாவது குறித்து கவலைப்படாது .........


Ms Mahadevan Mahadevan
செப் 10, 2024 09:22

கட்சி பணானதில் கட்சி இடத்தில் வைத்து கொள்ளலாம். எதுக்கு பொது மக்களின் பணத்தை வீனடிக்கணும்.


karunamoorthi Karuna
செப் 10, 2024 08:07

எதிர் காலத்தில் இந்த சின்னம் அரசு முத்திரையாக கூட வர வாய்ப்பு உள்ளது


sethu
செப் 10, 2024 10:25

அவனே மகாதிருடன் அவன் முத்திரை அரசுக்கா தமிழன் அடித்தாலும் திருந்த வாய்ப்பு இல்லை இதெல்லாம் என்ன பொழப்பு .


Ms Mahadevan Mahadevan
செப் 10, 2024 07:51

கிடபது எல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மணமேடையில் வை என் பது போல் எவ்வளவோ செய்ய வெண்டியதிருக்க பேனா வாம் பேனா. சுத்த வெஸ்ட். சுத்த வேஸ்ட்.


Rajarajan
செப் 10, 2024 07:34

திராவிட சுடுகாடு.


முக்கிய வீடியோ