உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலியே பயிரை மேய்வது தமிழகத்தின் சாபக்கேடு!

வேலியே பயிரை மேய்வது தமிழகத்தின் சாபக்கேடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வேலியே பயிரை மேய்வது போல, போதைப்பொருட்கள் நடமாட்டத்தில், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில், வெளி மாநிலங்களில் இருந்து, 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக, தி.மு.க.,வின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் கைது செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்வது போல, போதைப்பொருட்கள் நடமாட்டத்தில், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.கடந்த பழனிசாமி ஆட்சியில், குட்கா நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி, சட்டசபைக்கே குட்காவை எடுத்து சென்று குற்றம் சாட்டியவர் ஸ்டாலின். அவர் முதல்வரான பின், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ, எந்தவிதமான நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை.தி.மு.க., நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் வழியாக, ஆளுங்கட்சி ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SRINATH
ஏப் 28, 2024 11:04

கருணாநிதி remove prohibition During ADMK regime , DMK alleged that GUDKA was in VOGUE Now in DMK regime DRUG in various forms are in appearance The Dravidian parties embrace drug culture Does Dravidian Model include this also?


Lion Drsekar
ஏப் 28, 2024 10:58

இசை ஞானி இளையராச்சாவின் சகோதரர் திரு கங்கை மாறன் அவர்களின் சோகக் கதையைக் கேட்டால் இன்னமும் பல சாபக்கேடுகளின் கதக்கலை நாம் அறியலாம், கர்மவீரர் கூறியது போல் எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில்தான் ஊறுகின்றன காட்டில் மிருகங்கள்தான் ஒன்றை ஒன்று ஹாக்கிக்கொண்டு அடித்து உண்டு வாழ்வதால் எந்த நேரம் தமக்கு உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்று தூங்காமல் தூங்கி வாழ்க்கையைக் கழிப்பது போல் ஆகிவிட்டது இன்று மக்களின் நிலையம் வந்தே மாதரம்


அப்புசாமி
ஏப் 28, 2024 08:15

தமிழக ....


J.V. Iyer
ஏப் 28, 2024 08:14

நன்றாகச்சொன்னீர்கள் இதையும் ஐம்பது வருடங்களாக மேய்வதை பார்த்துக்கொண்டிருக்கிறோம் நமக்குத்தான் சொரணை இல்லை இப்போது மது போதை, போதைப்பொருள் என்று நம்மை எருமை மாடுகளாக ஆகிவிட்டன எல்லாம் இந்த திருட்டு திராவிட ஆட்சிகளின் அருள்


Kasimani Baskaran
ஏப் 28, 2024 08:11

மாடல் கோட்பாடுகளின் படி வேலிக்கு பயிறை மேய உரிமை உண்டு அதை சங்கிகள்தான் எதிர்ப்பார்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ