உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லோர் மனதிலும் ஜெயலலிதா நினைவு இருக்கும்; ரஜினி நெகிழ்ச்சி பேட்டி

எல்லோர் மனதிலும் ஜெயலலிதா நினைவு இருக்கும்; ரஜினி நெகிழ்ச்சி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஜெயலலிதா இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும்' என ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு போயஸ் கார்டனில் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2cska3a5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு ரஜினி அளித்த பேட்டி: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ., தீபா அழைப்பை ஏற்று வந்தேன். இங்கு நான் வந்தது இது நான்காம் முறை. 1977ல் அவரை பார்க்க முதல் முறையாக வந்திருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அப்போது வந்திருந்தேன். 2ம் முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்தேன்.

சுவையான நினைவு

3ம் முறை மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தேன். இது நான்காம் முறை. அவர் இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும். இங்கு வந்து அவர் வாழ்ந்த வீட்டில், அஞ்சலி செலுத்தி அவரது இனிப்பான, சுவையான நினைவுகளோடு செல்கிறேன். அவர் நாமம் வாழ்க. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Durai Kuppusami
பிப் 25, 2025 07:20

நீ என்ன சொன்னாலும் அதை நம்ப நாங்கள் முட்டாள்கள் அல்ல அம்மா இப்போ இல்லை என்கிற தைரியம்... அடிச்சு விடு கண்ணா,...


vijay
பிப் 24, 2025 20:32

எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்ன்னு நினைக்கறாரு தலைவரு நல்ல அருமையான பிளான் .... நீங்க நடத்துங்க


Ray
பிப் 24, 2025 19:20

FOR HER DUBIOUS WORLD RECORD


K.Ramakrishnan
பிப் 24, 2025 18:59

அரசியல்வாதிகள் தான் மாற்றி மாற்றிப்பேசுவாங்க..ஆனால் இப்போது நடிகர்களும் மாற்றிப்பேசுறாங்க.ஒரு படத்தில் ஜோடியாக நடிச்சவங்க எல்லாம் பிறிதொரு காலத்தில் அம்மா ஆக நடிச்சதில்லையா..அதே போல ரஜினியும், 90 களில் எப்படி எல்லாம் பேசினார் என்பதை மறக்கவே முடியாது.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 24, 2025 18:31

வாங்கிய கூலிக்காக ஆண்டவனே வந்தாலும் தமிழ் நாட்டை காப்பாத்த முடியாதுன்னு சொல்லி தமிழ்நாட்டை நாச பாதைக்கு செல்ல இவர் கூவியதும் எல்லோர் நினைவிலும் இருக்கும்.


P. SRINIVASAN
பிப் 24, 2025 17:54

பிழைக்க தெரிந்த மனிதன்.


Balaa
பிப் 24, 2025 16:41

இவன் ஒரு சுயநல நாடக கோஷ்டி. எல்லா எடத்துலையும் துண்டு போட்டு வைப்பான். இன்னுமா இந்த ஏமாற்று பேர்வழிய நம்பறீங்க.


DUBAI- Kovai Kalyana Raman
பிப் 24, 2025 15:16

போயஸ் கார்டன் JJ வீட்டை வாங்க போறாரு , போய் பார்த்து confirm பண்ண தான் இப்போ போனது. Confirm பண்ணியாச்சா தலைவரே ..


சின்ன சுடலை ஈர வெங்காயம்
பிப் 24, 2025 19:26

ஐந்தாவது முறை செல்லும் போது வீட்டுக்கு owner ஆ?


பல்லவி
பிப் 24, 2025 14:54

2000 um ஞாபகம் இருக்கு அதான்


Madras Madra
பிப் 24, 2025 13:57

திமுக அழிய இருந்த காலத்தில் தேவை இல்லாமல் குரல் குடுத்து தமிழகத்துக்கு மிகப் பெரும் தீங்கு இழைத்த நீங்கள் இப்ப பேசாம இருப்ப்பது நல்லது