உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்

கள்ளச்சாராய விவகாரம்: சிபி.ஐ., விசாரணை வேண்டும்: அ.தி.மு.க., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜூன் 20ம் தேதி துவங்கியது. கள்ளச்சாராய பலிகளுக்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக, அ.தி.மு.க., உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டையில் வந்தனர். சபை துவங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எழுந்து பேசினார். சபாநாயகர் அனுமதி தரவில்லை. சபாநாயகரை கண்டித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3quk2p4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அப்பாவு விளக்கம்

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. பேச வேண்டிய நேரத்தில் அனுமதி தருகிறேன். கேள்வி நேரம் மக்களுக்கான நேரம். எதிர்க்கட்சிகளுக்கு பேச முறைப்படி அனுமதி உண்டு. எதிர்க்கட்சியினருக்கு எந்த நோக்கம் இருக்கு என்று தெரியவில்லை. மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இதுபோல் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி நேரத்திற்கு முன்பாக, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பது சரியல்ல. வருங்காலத்தில் எதிர்க்கட்சியினர் நாகரீகமாக செயல்பட வேண்டும். உங்கள் நெருக்கடியை தீர்க்கும் இடம் சட்டசபை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

சி.பி.ஐ., விசாரணை அவசியம்

சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: மக்களுடைய உயிர் பிரச்னை என்ற வகையில் சட்டசபையில் பேச அனுமதி கோரினோம். ஆனால் சபாநாயகர் பேச அனுமதி தர மறுத்துவிட்டார். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நடைபெறவில்லை என மாவட்ட கலெக்டர் முதலில் கூறினார். கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு தாமதமாக வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

வேற என்ன முக்கிய பிரச்னை

கள்ளக்குறிச்சியில் போலீசாருக்கு தெரிந்தே, கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. மக்கள் உயிரைப் பறித்த சண்டாளர்களை தண்டிக்க நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார். இது குறித்து, சி.பி.ஐ., விசாரணை அவசியம். தமிழக அரசின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி., விசாரித்தால் உண்மை வெளி வராது. கள்ளச்சாரயத்தால் நாள்தோறும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை விட வேற என்ன முக்கிய பிரச்னை இருக்கிறது. அரசு துரிதமாக செயல்பட்டு இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

புறக்கணிப்பு

இந்நிலையில், இன்றும் ( ஜூன் 22) சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 22, 2024 15:18

கோரிக்கை நியாயமானதே. உள்ளூர் போலீஸ் விசாரணை வைத்தால் கலெக்டரே வந்து கள்ள சாராயம் இல்லவே இல்லை


Kasimani Baskaran
ஜூன் 22, 2024 14:35

திராவிட வாய்ப்பு குறைவு. ஆகவே ஆட்சியை கலைத்து விட்டு விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்.


Barakat Ali
ஜூன் 22, 2024 12:59

சி பி ஐ என்ன ஆகாயத்தில் இருந்து குதித்த அமைப்பா ???? கேட்டது நானில்லை ..


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 12:47

யானைக்கொரு காலம் வந்தால் கழுதைக்கு ஒரு காலம் வரும்.


J.Isaac
ஜூன் 22, 2024 15:48

முதலில் பிஜேபி, அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் டாஸ்மாக் பக்கம் செல்லுவதை நிறுத்தினாலே விரைவில் டாஸ்மாக் மூடப்படும்.


ram
ஜூன் 22, 2024 11:25

இன்னு பத்தாது... நீங்க ஆளும் கட்சியா இருந்தப்போ.. என்னா ஆட்டம் போட்டானுங்க... இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. நடக்கட்டும்.. நல்லா கிழியட்டும்...


Rajah
ஜூன் 22, 2024 11:16

எதிர்க் கட்சிகளாக இருப்பவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி எடுப்பது இயல்புதான். ஆனால் அதிமுகவின் செயல்பாடுகள் செயற்கையாகத் தெரிகின்ற்து. இந்தப் போராட்டமானது தங்கள் நலம் கருதியே நடைபெறுகின்றது என்பது அப்பட்டமாக தெரிகின்றது . நல்ல நடிகர்களின் கட்சியில் நடிப்பதற்கு தெரியவில்லை. பாஜக எப்படி இந்த கள்ளச்சாரய விவகாரத்தை கையாள்கின்றது என்று பாருங்கள். அவர்களை பார்த்தாவது திருத்தங்கள். இதற்காகத்தான் பாஜகவை நல்ல எதிர்க்க கட்சி என்கின்றனர். இத்தனை காலமும் ஒரு நல்ல எதிர்க்க கட்சியாக நீங்கள் திமுகவை எதிர்த்து செயல்படவுமில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில் செயல் படுத்த முடியாமல் தடுமாறுகிண்றீர்கள்.


அப்புசாமி
ஜூன் 22, 2024 11:05

சி.பி.ஐ வந்து என்னத்த கிழிக்கப் போகுது? பேசாம மாவட்டத்துக்கு.ஒரு சி.பி.ஐ ஆபீஸ் திறந்து கள்ளச்சாராயம் காய்ச்சறதை கண்காணிக்கலாம்.


hari
ஜூன் 23, 2024 09:06

கிண்டல் கமெண்டை விட்டுட்டு கருத்துள்ள கமெண்டை எப்போ போடுவே கோவாலு....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை