மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago
சென்னை: “கல்வராயன் மலையை, சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்,' என, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:ஈஸ்வரன்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையை, சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.கல்வராயன் மலையை கள்ளச்சாராய மலை என்று, எல்லோரும் இன்று அழைக்கும் நிலை உள்ளது. அதை மாற்றி, மக்கள் பயன்படுத்தும் வகையில் அதிகமானோர் வந்து சென்றால், அது தடுக்கப்படும். எனவே, அம்மலையை சுற்றுலா தலமாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.அமைச்சர் ராமச்சந்திரன்: கல்வராயன் மலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம். அதை மேம்படுத்துவது அவசியம். அரசின் நிதி நிலைக்கேற்ப, முதல்வர் உத்தரவு பெற்று, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
2 hour(s) ago
3 hour(s) ago