உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐதராபாத் அணியை வீழ்த்தி கோல்கட்டா அணி 3வது முறை சாம்பியன்

ஐதராபாத் அணியை வீழ்த்தி கோல்கட்டா அணி 3வது முறை சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஐ தராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது முறையாக கோல்கட்டா அணி சாம்பியன் ஆனது.கோல்கட்டா- ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் விளையாடிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா2 ரன்களுக்கும் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.நிதிஷ்குமார் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மார்க்ரம் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஷபாஷ் அஹ்மது 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் க்ளாசென். உனத்கட் 4 ரன்களில் அவுட் ஆனார்.கடைசிவரை போராடிய பேட் கம்மின்ஸ் 24 ரன்களுக்கு அவுட் ஆக ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில் கோல்கட்டா அணிக்கு 114 ரன்கள் இலக்க நிர்ணயித்தது ஐதராபாத் அணி. கோல்கட்டா அணியின் ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளையும் ராணா மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.ஐபிஎல் இறுதி போட்டியில் 120 பந்துகளை முழுமையாக ஆடாமல் அனைத்து விக்கட்களையும் இழந்து வெறும் 113 ரன்கள் ( குறைந்த பட்ச ரன் ) ஆட்டம் இழந்தது 'சன் ரைசர்' அணி.114 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் அடுத்து களமிறங்கிய கோல்கட்டா அணி 10.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி(2012, 2014 மற்றும் 2024) 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கோல்கட்டா அணியின் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் அரைசதம்(52) அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். குர்பாஷ் 39 ரன்கள் எடுத்தார்

இதுவரை ஐ.பி.எல்., கோப்பை வென்ற அணிகள் விபரம்

2008 ராஜஸ்தான்2009 டெக்கான்2010 சென்னை2011 சென்னை2012 கொல்கத்தா2013 மும்பை2014 கொல்கத்தா2015 மும்பை2016 ஹைதராபாத்2017 மும்பை2018 சென்னை2019 மும்பை2020 மும்பை2021 சென்னை2022 குஜராத்2023 சென்னை2024 கொல்கத்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
மே 27, 2024 11:43

இங்கே தோணி சிக்சர் அடிக்கணும், சி.எஸ்.கே ஜெயிக்கணும்னு கோவில்.கோவில் சுத்தி அர்ச்சனை பண்ணினவங்களை நினைச்சா சிரிப்பாவும் இருக்கு. பாவமாவும் இருக்கு.


டேனியல்,இரட்சண்யபுரம்
மே 27, 2024 02:28

இன்று கலாநிதி ஜூன் 4 ல் தயாநிதி!


Tiruchanur
மே 27, 2024 01:30

3 பூணூல் போட்ட ப்ராஹ்மணர்கள் - ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி ஐயங்கார் இன்னொரு பூணூல் போட்ட கௌ தம் கமபீரோட சேர்ந்து த்ரவிடியா கூட்டத்துக்கு மாறன் குடும்பத்தின் SRH10ம் நாள் கார்யம் - திவசம் பண்ணிட்டாங்க.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை