உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல் முதலாக ஓசூரை சேர்ந்தவர் கிருஷ்ணகிரி எம்.பி., ஆனார்

முதல் முதலாக ஓசூரை சேர்ந்தவர் கிருஷ்ணகிரி எம்.பி., ஆனார்

ஓசூர்:கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையிலுள்ள கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணி பலத்துடன், காங்., வேட்பாளர் கோபிநாத், அ.தி.மு.க.,வில் ஜெயப்பிரகாஷ், பா.ஜ., சார்பில் நரசிம்மன், நா.த.க., கட்சியில் வித்யாராணி வீரப்பன் உட்பட, 27 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் ஒன்பது முறை, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக வாழப்பாடி ராமமூர்த்தி, நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றார். கடந்த, 2019 தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்ட செல்லக்குமார் வெற்றி பெற்றார்.கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இதுவரை ஓசூரைச் சேர்ந்த யாரும் தேர்வு செய்யப்பட்டதில்லை. இதுவரை கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான், கிருஷ்ணகிரி எம்.பி.,யாக வெற்றி பெற்றிருந்தனர்.இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, ஓசூரைச் சேர்ந்த கோபிநாத், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஓசூரைச் சேர்ந்த, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாஷை தோற்கடித்து எம்.பி.,யாகி உள்ளார். இதைத் தொடர்ந்து, ஓசூரைச் சேர்ந்த ஒருவர், கிருஷ்ணகிரி எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவது முதல்முறையாக நிகழ்ந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை