உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற முடியாது கிருஷ்ணசாமி பேட்டி

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற முடியாது கிருஷ்ணசாமி பேட்டி

திருநெல்வேலி:மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது. 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன பாதுகாப்பு சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகும் மாஞ்சோலையில் தனியார் குத்தகை தொடர்ந்து நடந்துள்ளது. 2018ல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றம் செய்த பிறகும் ஏன் அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கவில்லை. குத்தகை முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்போதே ஏன் தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு வன சுற்றுலாத்தலமாக்கும் அறிவிப்புகளால் வனவிலங்குகள் பாதுகாக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. தோட்டத் தொழிலாளர்களை மாஞ்சோலையிலேயே தொடர்ந்து குடியமர்த்த நிபுணர் குழு அமைக்க வேண்டும். 2006 வன உரிமைச் சட்டத்தின் படி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாது. பல இடங்களில் இந்தச் சட்டத்தின் படி மலைவாழ் மக்களுக்கு அரசு நிலம் வழங்கியுள்ளது. எனவே மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் நிலம் வழங்க வேண்டும். பசுமை சுற்றுலா என்ற பெயரில் மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற சிலர் திட்டமிட்டுள்ளனர். அதை தடுக்க மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை