உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி தரும் உத்வேகத்துடன் லட்சிய பயணம் தொடர்வோம்: ஸ்டாலின்

கருணாநிதி தரும் உத்வேகத்துடன் லட்சிய பயணம் தொடர்வோம்: ஸ்டாலின்

சென்னை: கருணாநதி தரும் உத்வேகத்துடன் நம் லட்சியப்பயணத்தை தொடர்வோம் மக்கள் பணியாற்றி தொடர் வெற்றி பெறுவோம் என தொண்டரகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.கருணாநிதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கருணாநிதியின் நினைவிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் அமைதி பேரணி இது . கருணாநிதி தரும் உத்வேகத்துடன் நம் லட்சியப்பயணத்தை தொடர்வோம். மக்கள் பணியாற்றி தொடர் வெற்றி பெறுவோம். தலைமுறையை வாழவைத்த தலைவருக்கு தமிழர்கள் செலுத்தும் நன்றி காணிக்கையாகும்.ஓமந்தூர் தோட்ட வளாகத்தில் கலைஞர் சிலை அருகில் இருந்து கடற்கரை நினைவிடம் வரையில் அமைதி பேரணி நடைபெறுகிறது. அமைதி பேரணியில் அணி திரள்வோம்.மாவட்ட நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி நன்றி செலுத்துங்கள். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

xyzabc
ஆக 06, 2024 11:03

ஊரை ஏமாற்றி ஆட்சி . இன்னும் மீதி இருக்கா ?


Ramesh Sargam
ஆக 04, 2024 22:12

உங்கள் லட்சியம்தான் என்ன? ஊரை கொள்ளையடிப்பதா...?


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 21:12

என்னது பேராசிரியர் உத்வேகம் கொடுக்கலயா ????


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை