உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயம்

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தமிழகத்தில், மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில், முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. இந்த மானியத்தை பெறுவதற்காக, நுகர்வோர் தங்களின் ஆதார் எண்ணை, மின் நுகர்வோர் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, எம்.எல். ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்படி மனுதாரரை ஏற்கனவே அறிவுறுத்தியது. அதன்படி, மனுதாரர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவும், சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.இதற்கு எதிராக எம்.எல்.ரவி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'மின் நுகர்வோர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை, மாநில அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ளது. இதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

GMM
மார் 05, 2025 09:26

தற்போதைய சூழலில் மின் எண்ணுடன் ஆதார், வருமானவரி கணக்கு எண் அவசியம். தனியார் சென்டர் மூலம் போலி ஆதார்? குடி இருக்கும் இடத்தின் ஆதார் கேந்திரம் போஸ்ட், தாலுகா, முனிசிபாலிடி.. போன்ற அரசு அலுவலங்களில் தனியார் மூலம் வழங்கிய ஆதார் மறு தணிக்கை செய்ய வேண்டும். போலிகள் குறையும். வாக்காளர் அட்டையுடன் இணைப்பு எப்போது? ஒரு தனி நபர் தனக்கு தான் நீதிமன்றத்தில் நிவாரணம் கேட்க வேண்டும். இந்தியாவில் தான் பல கோடி மக்களுக்கு அவர்கள் விருப்பம் தெரியாமல், தனிநபர் பொது நல போர்வையில், உச்ச மன்றம் வரை செல்ல முடிகிறது. மனுவும் ஏற்கப்படுகிறது. விசாரித்து தீர்ப்பு வருகிறது. முக்கிய வழக்குகள் அயுள் முடிந்தவுடம் இறுதி தீர்ப்பு வாரும்? அடுத்த தலைமுறை அனுபவம் பெற உதவும். கொலிஜியம் சிறப்பு. ?


orange தமிழன்
மார் 05, 2025 08:14

ஆதாரை voters ID யோடு இணைத் துவிட்டால்.....2026குள்....


Oru Indiyan
மார் 05, 2025 07:59

திருடர் கட்சிகள் காமெடி கட்சிகள் எல்லோருமே கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கிறார்கள். அதற்கும் ஆதார் எண் வேண்டுமா?


பேசும் தமிழன்
மார் 05, 2025 07:47

ஏன் மின் இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க மறுக்கிறார்.. அவருக்கு எத்தனை வீடுகள்.. மின் இணைப்பு இருக்கிறது என்ற உண்மை வெளியே வந்து விடும்.. அதனால் தான் எதிர்க்கிறார் போல் தெரிகிறது.


Ray
மார் 05, 2025 07:34

ஆதார் எண்ணை மலைபோல் நம்புகிறார்கள் ஆனாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஆதார் வங்காளதேச கள்ளக் குடியேறிகளுக்கும் சுலபமாக கிடைக்கிறது சோகம்.


அப்பாவி
மார் 05, 2025 07:18

வீட்டில் தினமும் ஃபேன், லைட் ஸ்விட்ச் போடறேன். ஆதார் எண் காமிச்சாதான் ஃபேன் இடும், லைட் எரியுமா?


Laddoo
மார் 05, 2025 07:53

புத்தியில்லா அப்பாவி


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 05, 2025 07:00

இந்த அதாருக்காக திமுக ஒரு காலத்தில் பயங்கரமாக எதிர்த்தது. கோரோணா தடுப்பு ஊசியை எதிர்த்தது. சமூக வலை தளங்களில் தவறான கருத்தை பதிவிட்டு மக்களை குழப்பினார்கள். இப்போது ஆதாரின் முக்கியத்துவம் உணர்ந்து ஏற்றுக் கொண்டது. கோரோணா தடுப்பூசி ஆட்சிக்கு வந்ததும் அதன் முக்கியத்துவம் உணர்ந்து போட்டு கொள்ள வைத்தார்கள். கோரோணா தடுப்பு ஊசி டோக்கன் கூட ஈவு இரக்கம் இல்லாமல் 200 ரூபாய்க்கு விற்றார்கள். மறப்போம் மன்னிப்போம். இதே போல் மும்மொழி கொள்கையை ஏற்று அரசு பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயம் செய்து இதே திமுக கற்பிக்கும் எப்படி பிரதமர் காப்பீடு திட்டத்தை முதல்வர் காப்பீடு என்று சொல்லி கொள்கிறதோ அதே போல் அரசு பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயம் கற்பிக்கும். அரசு பள்ளிகளில் ஹிந்தியை கற்பிக்கும் நாள் வெகு தூரமில்லை.


Laddoo
மார் 05, 2025 07:57

//அரசு பள்ளிகளில் ஹிந்தியை கற்பிக்கும் நாள் வெகு தூரமில்லை.// த்ரவிஷ தூண் ஒவ்வொன்றாக இடிந்து விழுகிறது


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 05, 2025 10:34

திமுக வாயளவில்தான் எதிர்த்தது. ஆனால் பாஜக ஆதாரை எதிர்த்து நீதிமன்றம் போய் தடையாணை வாங்கியது. நீதிமன்றத்தில் ஆதாரினால் எப்படிப்பட்ட மோசடிகள் நடக்கலாம் என்று பட்டியலிட்டது பாஜக. இப்போது அதே மோசடிகள் நடக்கும்போது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதும் இதே பாஜக


Rajan A
மார் 05, 2025 06:55

போலி ஆதாரே வந்து விட்டது. நல்ல தரமான மீட்டர் இருந்தால் போதும். அதோடு மின் இலவசங்களை நிறுத்த வேண்டும். உணவு பொருட்கள் வாங்கும் இடை தரகர்களை கட்டுப்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகள் லாபம் பெறுவர்


Laddoo
மார் 05, 2025 07:58

அண்ணாமலையின் ஆட்சியில் இதெல்லாம் சாத்தியமே. கூட்டணியில் இருந்தாலும் சாதிப்பார்.


SIVAKUMAR
மார் 05, 2025 06:17

கொள்கை முடிவு என்று தள்ளுபடி செய்வதற்கு நீதிபதி எதற்கு? நீதிமன்றம் நீதிபதிகள் தேவை இல்லை


Kasimani Baskaran
மார் 05, 2025 06:09

இதையெல்லாம் செய்வோம்.. ஆனால் வாக்காளர் அட்டையை மட்டும் ஆதார் மூலம் இணைக்கவே மாட்டோம்.


முக்கிய வீடியோ