உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியத்திற்கு ரூ.13,811 கோடி இழப்பு

மின் வாரியத்திற்கு ரூ.13,811 கோடி இழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மின் வாரியம், ஒரு நிதியாண்டிற்கான வரவு - செலவு தொடர்பான உத்தேச விபரங்களை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கிறது. அதை பரிசீலித்து, ஆணையம் ஒப்புதல் தரும்.ஆணையம் ஒப்புதல் அளித்ததை விட அதிக செலவு ஏற்பட்டால், அதற்கான அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும்.அதன்படி, 2022 - 23ம் நிதியாண்டிற்கான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வரவு - செலவு விபரம், ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதை, மக்களின் பார்வைக்கு வெளியிட்ட பின் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.கடந்த நிதியாண்டில் மின் கட்டணம் வாயிலாக 60,505 கோடி ரூபாய்; மானியம் நிலுவை 1,776 கோடி ரூபாய்; இதர வருவாய் 5,398 கோடி ரூபாய்; தமிழக அரசின் மானியம் 12,688 கோடி ரூபாய் என, மொத்தம் 80,367 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது.செலவுகளை பொறுத்தவரை, அதிக அளவாக மின் கொள்முதல் மற்றும் வழித்தடத்திற்கு, 51,460 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.மின் உற்பத்திக்கு 22,407 கோடி ரூபாய்; கடன்களுக்கான வட்டிக்கு 6,359 கோடி ரூபாய்; இயக்கம் மற்றும் பராமரிப்புக்கு 10,701 கோடி ரூபாய் என, மொத்தம் 94,178 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.வரவை விட செலவு அதிகம் இருப்பதால், 13,811 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramanan Seshadri
மே 17, 2024 11:24

சிவகார்த்திகேயன் சூரி நடித்த படத்தில் : கருப்பன் கேக்குறான் என சொல்லி தனக்கு வேண்டியதையெல்லாம் பூசாரி கேட்பார் அது மாதிரி ஆணையம் பெயர் சொல்லி இவர்களுடைய நிர்வாக திறமையின்மையை மக்கள் தலையில் கட்டுவதற்கு இது ஒரு சாக்கு


Rajasekar Jayaraman
மே 17, 2024 11:19

பகல் கொள்ளையர்கள் இருக்கும் வரை எந்த நிறுவனமும் உருப்படாது பல்லாயிரம் கோடி நஷ்டத்தில் தான் இயங்கும் மக்கள் விழித்துக் கொண்டால்தான் தமிழகம் பிழைக்கும்.


karthik
மே 17, 2024 09:26

அரசாங்க நிறுவனம் என்றாலும் அது மக்களின் பணத்தில் இயங்கும் நிறுவனம் தான் மற்ற தனியார் நிறுவனங்களை போல லாபத்துடன் இயங்குவது மிக முக்கியம் லாம்பம் குறைவாக கூட இருக்கலாம் ஆனால் நஷ்டம் வரவே கூடாதுமக்கள் சேர்ந்து நடத்தும் தொழில் மக்கள் பணம் வீணாகிறது எதெற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லி மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்கி செல்வம் கொழிக்கும் அரசியல் வியாதிகள் மத்திய அரசின் ரயில்வே ஐந்து ஆயிரம் கோடி ருபாய் லாபத்தில் இயங்குவதை மக்களிடம் சொல்வார்களா? கேவலமான நிர்வாகம் கேவலமான அரசியல் கொள்கை தமிழ் நாடு அழிப்பின் வழியில் செல்கிறது


Kannan Chandran
மே 17, 2024 08:55

இலவச மின்சாரம, இலவச பஸ் போன்றவற்றின் இழப்பீடுகளை அரசு மானியமாக கொடுக்கும் அதாவது மக்களின் வரிப்பணம் ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள இந்த கடன்கள் முற்றிலும் இவர்கனின் நிர்வாக சீர்கேடே


மொக்கை தமிழன்
மே 17, 2024 08:50

நான் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்(இது டேன்ஞ்ஜிகோ கீழ் வருகிறது)5 லட்சம் டெபாசிட் செய்துள்ளேன் மாத மாதம் வட்டி பெற்றுக் கொண்டு வருகிறேன் இது இனி நடக்குமா என்று தெரியவில்லை ஏனென்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்ட கணக்கை தான் காட்டிக் கொண்டு வருகிறது இந்த டெபாசிட் எனக்கு திரும்பி கிடைக்குமா என்பது மிக பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இனி இந்த தமிழக அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.


jayvee
மே 17, 2024 08:48

அதிகபட்சமாக நாற்பது சதவிகிதம் வரை ஊழல் நடைபெறுகிறது என்று வைத்துக்கொண்டால், அப்படி ஊழலே நடக்கவில்லை என்று கூட வேண்டாம் ஊழல் வெறும் இருபது சதவிகிதம் என்றாலும் கூட மின்துறை குறைந்த பட்ச லாபத்தில் அல்லது லாப நஷ்டமினிறி இயங்கலாம் என்ன செய்வது அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக அதிகளவில் லஞ்சம் பெறக்கூடிய துறையாக போக்குவரத்து, பதிவுத்துறைகளுக்கு இணையாக மின்வாரியம் உள்ளது என்பதே உண்மை மும்முனை மின்சாரம் பெற வீட்டிற்கு குறைந்த பட்ச லஞ்சம் முப்பத்தாயிரம்


raja
மே 17, 2024 08:26

திருட்டு திராவிட மாடலில் தமிழகம் ஒரு கொள்ளை கூட்ட கும்பலால் கோவால் புற குடும்பத்தால் சுரண்ட படுகிறது


VENKATASUBRAMANIAN
மே 17, 2024 08:10

திமுகவின் சாதனை இதுதான் திராவிட மாடல் அரசு


GMM
மே 17, 2024 07:30

மின் கொள்முதலில் ஊழல் அறிய வேண்டும் நாம் ஏன் தேவைக்கு உற்பத்தி செய்ய முடியவில்லை? ஒருவருக்கு ஒரு மின் அடையாள எண் எத்தனை வீடு, கடை, வயல் இருந்தாலும் இந்த எண் குறிப்பிட்ட வேண்டும் இது ஆதாருடன் இணைக்க வேண்டும் மின் இலவசம் நீக்கி, அடையாளம் ஏற்படுத்த குறைந்த பட்ச சதுர அடி அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் அதிகம் சோலார் விளக்கு நிறுவ வேண்டும் காற்றாலை உற்பத்தி அதிகரிக்க வேண்டும் நிர்வாக செலவு மொத்த வருவாயில் பத்து சதவீதம் மட்டும் உயர் மின் அழுத்த கம்பி சுற்றி நூறு அடி வரை கட்டடங்கள் இருக்க கூடாது இழப்பு குறையும்


Varadarajan Nagarajan
மே 17, 2024 07:22

மின்வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஆண்டுதோறும் நஷ்ட கணக்கு கொடுப்பது என்பது மின்கட்டணத்தை உயர்த்த நடைபெறும் சடங்குகளில் ஒன்று மக்களிடம் கருத்துகேட்ப்பு என்று மற்றொரு சடங்கயும் ஒழுங்குமுறை ஆணையம் - இடங்களில் நடத்தும் அதில் யார்வேண்டுமானாலும் கருத்துக்களை தெரிவிக்கலாம் ஆனால் எதையும் கருத்தில்கொள்ளாமல் இந்த நஷ்டத்தை சரிசெய்ய ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி வழங்கும் இறுதியில் வாரியமும் அரசும் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை மத்திய ராசு நியமித்த ஆணையம்தாம் சொன்னது அதை நாங்கள் செயல்படுத்திடுகின்றோம் என சொல்லும் மக்களும் கேட்டுக்கொள்ளவேண்டும் சடங்குகள் நிறைவுபெறும் ஆனால் மத்திய அரசு சொன்ன மற்ற பல விஷயங்களை ஆணையமோ அல்லது வாரியமோ செய்யாது அதுசரி ஒருமுறை மாத்தியோசிப்போம் மின் கட்டணம் எவ்வளவு கொடுத்தால் வாரியம் நஷ்ட்டம் இல்லாமல் இயங்கும்? நாமாவது மின்சாரம் ல்லாமல் எப்படி வாழ்வது என்பதைபற்றி யோசிக்க ஆரம்பிக்கலாம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை