உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மத மாற்றம் அதிகம்: ஹிந்து முன்னணி தலைவர் வருத்தம்

தமிழகத்தில் மத மாற்றம் அதிகம்: ஹிந்து முன்னணி தலைவர் வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோபி : “தமிழகம் முழுதும் மதமாற்றம் அதிகமாக உள்ளது,” என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.ஹிந்து முன்னணியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் முழுநேர ஊழியர் சந்திப்பு கூட்டம், ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற காடேஸ்வரா சுப்பிரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் பிரச்னைக்குப் பின், ஹிந்துக்கள் மத்தியில் எழுச்சி உருவாகியுள்ளது. மதுரையில், வரும் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில், ஐந்து லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். தமிழகம் முழுதும் மதமாற்றம் அதிகமாக உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில், மதமாற்றம் நடப்பதை தடுக்க வேண்டும். இன்றைய அரசு, மதமாற்றத்தை ஊக்குவிப்போருக்கு சாதகமாக உள்ளது.ஏராளமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதாக, அறநிலையத் துறை அமைச்சர் சொல்லி வருகிறார். ஆனால், அந்த கோவில்களில் எவ்வளவு வருவாய் கிடைக்கிறது, எவ்வளவு செலவு செய்கின்றனர் என்பதற்கான வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.அவிநாசி தாலுகா பெருமாநல்லுாரில் உள்ள கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த, உள்ளூர் அதிகாரிகள் அனுமதி வழங்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Saleemabdulsathar
மார் 06, 2025 06:07

மத மாற்றம் மத மாற்றம் என்று தொடரந்து பொய் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்


M.LAKSHMANAN
மார் 05, 2025 15:04

Cheating model திராவிட மாடல்


Barakat Ali
மார் 05, 2025 10:04

மதமாற்றம் நடக்கிறது என்று தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் ஹிந்து மதத்தலைவர்களே.. உங்களில் யாராவது ஒருவர், ஒரே ஒருவர் ஹிந்துக்கள் தங்களது மதப் பெருமையை உணரும் வண்ணம் செயலாற்றியது உண்டா ????


Venkatesan
மார் 05, 2025 12:20

பல கோடி பேர் உண்டு ஐயா. ஆபிரகாமிய மாதங்கள் பல பல பொய் பிரச்சாரங்கள் செய்து பால் பவுடர் கொடுத்ததும் வாளை காட்டியும் தான் வளர்ந்தது. இந்து மதம் சனாதன தர்மம் உணர்வு வழி வாழ்வு. மதம் மாறிய பலரும் இதை உணர்கிறார்கள் ஆனால் பயந்து நடுங்குகிறார்கள். என்ன செய்ய.


baala
மார் 05, 2025 09:50

நீங்களும் மதமாற்றம் செய்ய வேண்டியதுதானே. ஏன் உங்களால் முடியவில்லை என்பதை யோசித்தீர்களா? அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது. ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை யோசிக்கவும். எதையோ பேச வேண்டும் என்பதற்க்காக பேசுவது ஏன்


ஆரூர் ரங்
மார் 05, 2025 11:17

மதம் மாறுவதால் குணங்கள் மாற்றுவதில்லை. மதம்மாறிய பலர் ஜெயிலில். மதம் மாற்றிய போதகர்கள் சிலர் பாலியல் குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர். ஹிந்து மதம் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டிய அமைச்சர் அல்லேலூயான்னு குரல் எழுப்பி மகிழ்கிறார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.


Mariadoss E
மார் 05, 2025 09:45

அனைத்து ஜாதி மக்களையும் பேதமின்றி ஆலயங்களில் அனுமதித்தால் எதற்கு மதம் மாறப் போகிறார்கள்?


தமிழ் நிலன்
மார் 05, 2025 12:20

பொய் பிரச்சாரம், ஏழைகளுக்கு அப்பம், வருமையை வியாபாரம் செய்வது, அறியாமையை அறுவடை செய்யலாம் என்றெல்லாம் மதம் மாற்றியவர்கள் தான் அதிகம். நீங்கள் எந்த வகை என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.


Mariadoss E
மார் 05, 2025 09:41

சும்மா இதே பல்லவிய எத்தனை நாளைக்குத் தான் பாடுவிங்க? சுதந்திரத்துக்கு முன்னேயும் இப்பவும் கிறிஸ்தவர்கள் 2% தான் இது உங்க அரசுத் தகவல் தான். அப்புறம் எங்க மத மாற்றம் நடந்தது?


Shekar
மார் 05, 2025 09:37

தன் அடையாளம், பெருமை மறந்த, தன்னை தானே தாழ்த்திக் கொள்ளும் அற்ப பிறவிகள்


RajeshKumar
மார் 05, 2025 08:47

ஆம். சில இந்துக்கள், கிறிஸ்தவர்களாக மாறி இருக்கிறார்கள்.


orange தமிழன்
மார் 05, 2025 08:10

இதற்கு ஒரே வழி தீயமுக ஒழிய வேண்டும்....


RAJ
மார் 05, 2025 08:08

சார் ரொம்ப லேட்டா சொல்றீங்கா ... இந்த பிஸ்னஸ் பல வருஷமா ஓடிக்கிட்டு இருக்கு..


சமீபத்திய செய்தி