உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்த சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூடல்?

பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்த சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூடல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பத்திரப்பதிவு குறைவாக உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களை மூடுவதற்கான பணிகளை, பதிவுத்துறை துவக்கியுள்ளது.தமிழகத்தில், 56 பதிவு மாவட்டங்களில், 582 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இதில், சார் - பதிவாளர் அலுவலக வாரியாக பத்திரங்களின் எண்ணிக்கை, வருவாய் குறித்து, பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது.பெரும்பாலான அலுவலகங்களில் ஆண்டுக்கு, 2,000த்துக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன. சில பகுதிகளில் ஆண்டுக்கு, 200 முதல் 500 பத்திரங்கள் தான் பதிவு செய்யப்படுகின்றன.இந்த அலுவலகங்களால், ஆண்டு வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு தீர்வாக, குறைந்த எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களை மூடுவது குறித்து, பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது.இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மிக குறைந்த எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படுவது, பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்துகிறது.அந்த அலுவலகங்களை, அருகில் உள்ள வேறு சார் -பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டியது அவசியம்.மிக குறைந்த அளவில் பத்திரங்கள் பதிவாகும் சார் பதிவாளர் அலுவலக எல்லையில் உள்ள கிராமங்களை, அருகில் உள்ள வேறு அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.இதே போன்று, அதிக பத்திரங்கள் பதிவாகும் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட சில கிராமங்களை பிரித்து, வேறு அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.இதற்காக, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகமும் எப்போது துவங்கப்பட்டது, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் பதிவான பத்திரங்களின் எண்ணிக்கை விபரங்களை பட்டியலாக தயாரித்து, வரும் 29க்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Alagar
ஏப் 28, 2024 14:13

அனைத்து பத்திர பதிவு அலுவலகத்திலும் ஆவணங்கள் குறைவதற்கும், வருவாய் குறைவதற்கும் முக்கிய காரணமே அந்த அந்த அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் மட்டுமே முதலில் அவர்களை வேட்டையாடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் நன்றி


Joe Rathinam
ஏப் 26, 2024 09:41

பத்திரப் பதிவு அலுவலகங்கள் இல்லாமல் ஆன்லைன் பதிவு செய்யப்பட்ட வேண்டும் தேவையான ஆவணங்களை ஆன்லைன் மூலம் சமர்பித்து அதை கைரேகை மற்றும் கருவிழி மூலம் சொத்துக்களை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களை அடையாளம் கண்டு பதிவு செய்யலாம்


suriyanarayanan
ஏப் 26, 2024 08:51

பத்திர பதிவு அனைத்து அலுவலகங்களில் வருமானம் ஏன் இல்லை? என்பதற்கு பல காரணங்கள் உள்ளன சொத்தில் வில்லங்கம் என்பதை தெளிவாக சொல்வது இல்லை அரசுக்கு சொந்தமான? அனாதினமா? புரம் போக்கா? கோயிலுக்கு சொந்தமானதா? இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதா? பழங்குடியினர்களுக்கு சொந்தமானதா? இராணுவத்துக்கு சொந்தமானதா? நீர்நிலை உள்ள இடமா? பல பல மக்களுக்கு வில்லங்க சான்று முலம் வேண்டும் வேண்டும் இவைகள் அனைத்தும் தெரிந்து கொள்ள தமிழகத்தின் அனைத்து துறைகளும் இணைந்து ஒரு குடையின் கீழ் இயங்க வேண்டும் நிலமோ,வீடோ, அப்பார்ட்மெண்டோ எதுவானாலும் ஒரே வில்லங்க சான்று முலம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கம்யூட்டர்ஜி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் மற்ற மாநிலங்களில் எப்படி வில்லங்க சான்று இருக்கிறது என்பதை நன்றாக ஆராய வேண்டும் வில்லங்க சான்று பார்த்து வாங்கும் சொத்து மீண்டும் நீதிமன்றம் ஏன் போக வேண்டும் அதிகாரிகள் மற்ற மாநிலங்களில் பத்திர பதிவுகளால் அரசுக்கு எவ்வளவு வருமானம் என்பதை பார்ப்பதோடு இருக்க கூடாது நம் மக்கள் வங்கியில் கடன் வழங்கியும் சொத்தை வாங்கிய பின் நிம்மதி இல்லாத நிலைக்கு அரசு தள்ள கூடாது நன்றி ??


VENKATASUBRAMANIAN
ஏப் 26, 2024 06:41

சாரா பதிவாளர்கள் அனைவரின் வீட்டிலும் சோதனை செய்ய வேண்டும் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் காசு இல்லாமல் அங்கே ஒரு வேலையும் நடக்காது இது ஊரறிந்த ரகசியம்


Dharmavaan
ஏப் 26, 2024 06:28

எங்கும் மாநில அரசு அலுவலகங்களில் லிப்ட் வசதி இல்லை அதுவும் சென்னையில் முகப்பேரில் பலமாடி கட்டிடத்தில் எல்லாம் ஒரே கும்பலாக இருப்பது லிப்ட் இல்லாமல் வயதானவர் பெண்டிர், ஊனமுற்றோர் ஏற கஷ்டப்படுகிறார்கள் கழிப்பிட வசதியும் சரியாக இல்லை இந்த கேவலங்கள் நீக்கப்பட வேண்டும் கேவலமான அரசு கையாலாகாத ஊழல் அரசு


சூரியா
ஏப் 26, 2024 05:57

இப்படிச் செய்தால்தான் சார் பதிவாளர் posting ஏலத்தொகை உயரும்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி