உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!

மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!

சென்னை: செங்கல்பட்டில் உள்ள மிகப்பெரிய நீர்நிலைகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை, ரூ.2,172 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்திற்குள் புதுப்பிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் மதுராந்தகம் ஏரியும் ஒன்று. இது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழமையான ஏரியாகும். இந்த ஏரியை ரூ.2,172 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்திற்குள் புதுப்பிக்கப்படும் என்றும், பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஏரி, கடைசியாக 1798ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் லியோனல் பிளேஸால் பிரிட்டிஷ் ஆட்சியின் போது புனரமைக்கப்பட்டது. 1,058 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நீர்நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரூ.2,172 கோடி செலவில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 86% பணிகள் நிறைவடைந்து உள்ளன.கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப் பணியின் மூலம் ஏரியில் தேங்கும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரிக்கும். ஆற்றுப்படுகையிலிருந்து மண் எடுத்துவரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. பழைய மதகுகளையும், அணைக்கட்டு பழைய தடுப்புச் சுவரையும் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதுப்பட்டு, வேடந்தாங்கல் உட்பட சுமார் 40 கிராமங்கள் இந்த திட்டத்தால் பயனடையும் என்றும், விவசாயிகள் வருடத்திற்கு மூன்று முறை நீர்ப்பாசனம் செய்ய முடியும் என்றும், வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வருகை தரும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு புகலிடமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raj
மார் 02, 2025 21:23

மதுராந்தகத்துல இன்னொரு ஏரியா வெட்டப்போறாங்க. அல்லது வெட்ற கமிஷன ஏத்த போறாங்களா. ஹையா ஜாலி ஜாலி.


sankaranarayanan
பிப் 27, 2025 18:41

காவிரி டெல்டா பகுதிகளில் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை வரையில் உள்ள காவிரி அதன் கிளைநதிகள் ஒன்றாவது தூர் வார பெரிய அளவில் நடவடிக்கை இப்போதே எடுக்க வேண்டும்.இல்லாவிடில் காவிரி நதியின் போக்கே மாறிப்போய் இருந்த இடத்தைவிட்டு பல மைல்கல் தள்ளிப்போயிடும்.பிறகு வருந்தி பயனில்லை


sethu
பிப் 27, 2025 12:04

1768 கிருத்துவ வெள்ளையன் புராணமய்த்தான் என்ற வரலாற்று செய்திக்கா சோம்பு தூக்குவது என்னமோ தன்னையும் ஆனந்த விகடனுக்கு ஈடாகவும் முரசொலிக்கு மாற்றாகவும் நிலை நிறுத்துவதை பார்த்தால் 200 ரூபாய் அவனா என வடிவேல் கேட்பதுபோல ள்ளது


sethu
பிப் 27, 2025 11:58

மொத்த எரியும் 1050 ஏக்கர்தான் ஒரு ஏக்கருக்கு 2 கோடிகள் செலவூ செய்யும் அளவிற்கு என்ன வேலை என்பதை திரு அண்ணாமலை வெளியிட வேண்டும் அவரோட தணிக்கைதான் சரியாக இருக்கும் . இந்த ரூபாய்க்கு மருதாந்தகம் ஏரியையே நகர்த்தி வேறு இடத்தில வைத்ததாக விடியல் கும்மல் கணக்கெழுதி இருப்பார்கள் பிஜேபிக்கு உண்மையை பொது மக்களுக்கு சொல்ல ஒரு நல்ல கண்டெண்டு கிடைத்துள்ளது .


visu
பிப் 27, 2025 11:53

ஒரு ஏரி சீரமைப்புக்கு 2172 கோடியா ?


sethu
பிப் 27, 2025 11:53

என்ன வேலை முடிந்துள்ளது என்ற போட்டோ போடுங்க 86% வேலை முடிந்துள்ளது என்றால். இதுவரை நீங்கள் வேலை அம்பித்த விபரம் சொல்லவில்லையே, பள்ளிகளுக்கு கருப்பு பலகை பென்சில் கொடுத்தாலே விழா எடுக்கும் நீங்கள் கமுக்கமாக 2172 கோடி ரூபாய் என்றால் சும்மா ஆரம்பிக்கமாட்டீர்கள் .சென்னையில் ஒரு கொள்ளை விழுப்புரத்தில் ஒரு திருட்டு காஞ்சிபுரத்தில் ஒரு உருட்டு கன்னியாகுமரியில் ஒரு குத்து என நாளெல்லாம் பணத்தை அள்ளும் உங்களுக்கு மக்கள் சேவை என்ற ஓன்று இருப்பதை மறந்தே போய்விட்ட்தா ?


C G MAGESH
பிப் 27, 2025 11:32

அடுத்த கூவம் சுத்திகரிப்பு திராவிட மாடல் திட்டம்


karthik
பிப் 27, 2025 11:09

போட்டான் பாரு திட்டம் 4000 பேக்கேஜ் மாதிரி 2000 கோடி பேக்கேஜ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை