உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 25 வாகனங்களை ஒற்றை நபராக சேதப்படுத்திய 17 வயது சிறுவன்! நள்ளிரவில் சம்பவம்

25 வாகனங்களை ஒற்றை நபராக சேதப்படுத்திய 17 வயது சிறுவன்! நள்ளிரவில் சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை அருகே நள்ளிரவில் சிறுவன் ஒருவன் 25க்கும் மேற்பட்ட வாகனங்களை தனி ஆளாக சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o6z4vshh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது பற்றிய விவரம் வருமாறு: செல்லூர் ஜம்பது அடி சாலையில் இருந்து கம்மாக்கரை சாலை வரை நள்ளிரவு நேரத்தில் ஆட்டோக்கள், பைக்குகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. வழக்கம் போல் அதன் உரிமையாளர்கள் இன்று (மார்ச்.3) வாகனங்களை எடுத்துச் செல்ல வந்தனர்.அப்போது 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ந்தனர். இரவு நேரத்தில் எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று குழம்பிய அவர்கள், அங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஜே.சி.பி., இயந்திரத்தை கொண்டு 17 வயது சிறுவன் இயக்கி சேதப்படுத்தியது தெரிய வந்தது.அதை தொடர்ந்து, அந்த சிறுவன் யார் என்று தேடி கண்டுபிடித்த போது அவர் போதையில் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். பின்னர் சிறுவனை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். பெற்றோரிடம் சண்டை போட்டுக் கொண்டு கோபத்தில் சிறுவன் இதுபோன்று செய்திருக்கலாம் என்று தெரிகிறது.இருப்பினும், ஏதேனும் போதை வஸ்துகளை பயன்படுத்தி அதன் எதிரொலியாக இப்படி நடந்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

ஆரூர் ரங்
மார் 03, 2025 16:55

அப்பா யாரு?


R K Raman
மார் 03, 2025 15:40

17 வயதில் ஜேசிபி ஓட்டுவது நல்ல திறமைதான். இருந்தாலும் அதுதான் உண்மை வயதா?


கத்தரிக்காய் வியாபாரி
மார் 03, 2025 14:42

திராவிட மாடல் அரசு வளர்ந்து செழித்திருப்பதற்கு இது ஒரு சாட்சி


Bahurudeen Ali Ahamed
மார் 03, 2025 14:26

ஒரு குற்றவாளிக்கு சிறுவன் என்ற பதம் நிச்சயம் ஒத்துவராது குற்றத்திலிருந்து தப்பிக்க வயது ஒரு காரணியாக இருக்க கூடாது அவனின் செயலுக்கேற்ப தண்டனை விதிக்கப்படவேண்டும் சிலர் வேண்டுமென்றே 18 வயதிற்கு குறைந்த குற்றவாளிகளை குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகிறார்கள் நம்முடைய சட்டவிதி வயதை காரணம் காட்டி தப்பிக்க எதுவாக இருக்கிறது குற்றத்திற்கான தண்டனை ஈடுபட்ட குற்றத்தை பின்பற்றித்தான் இருக்கவேண்டுமே தவிர வயதை வைத்து இருக்கக்கூடாது இந்த குற்றவாளியின் பின்புலத்தில்கூட சிலர் இருக்க நிறைய சான்ஸ் இருக்கிறது காவல்துறை அந்தக்கோணத்திலும் இவனை விசாரித்து தண்டனை வாங்கித்தரவேண்டும்


kulandai kannan
மார் 03, 2025 14:20

செல்லுர் என்றாலே கோக்கு மாக்குதான்.


SUBRAMANIAN P
மார் 03, 2025 13:54

இந்த லட்சணத்துல ஐயாவுக்கு வாழ்த்தரங்கம் நடத்துறாங்க.. ஜால்றா அரங்கம்


Nellai tamilan
மார் 03, 2025 13:47

தமிழகத்தின் ஒரே அப்பாவான தலைவர் சுடாலின் தனது இருப்புக்கரத்தோடு மதுரைக்கு வந்து மகனை அடக்க வேண்டும்.


Nagarajan D
மார் 03, 2025 12:49

அப்பாவின் ஆட்சியில் மகன் போதையில் செய்யும் செயலுக்கு கைதா?


அப்பாவி
மார் 03, 2025 12:32

இழுத்துப் போட்டு மிதிக்காம... 17 வயது தடிமாட்டை சிறுவன், போதைன்னு ஜல்லியடிக்கிறாங்க. கைய காலை வாங்குங்க. பிச்சையெடுத்து பொழைக்கட்டும்.


Ganesh Subbarao
மார் 03, 2025 13:15

விடியல் ஆட்சியில் எளிதில் கிடைக்கும் போதை பொருட்களே காரணம் சாதிக் பாடசா மாதிரி ஆளுங்களை கூடவே வச்சிருந்து வளர்த்து விட்டுட்டு இப்போ குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்


sridhar
மார் 03, 2025 12:30

என்ன பண்ணிக்கிட்டு இருக்க .


முக்கிய வீடியோ