உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்., 19 விடுமுறையை உறுதி செய்யுங்க!

ஏப்., 19 விடுமுறையை உறுதி செய்யுங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஓட்டுப்பதிவு அன்று, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என, அனைத்திலும் பணிபுரியும், அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மாநில அளவில், மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, தொழிலாளர்கள் புகார் அளிக்க வசதியாக, கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட வேண்டும்.- குமார் ஜெயந்த்,தொழிலாளர் நலத்துறை செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ