செய்திகள் சில வரிகளில்
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, காவல்துறை உள்ளிட்ட சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 129 பேருக்கு, அண்ணா பதக்கங்கள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல் துறையில் 100 பேர்; தீயணைப்பு துறையில் 10 பேர்; சிறை துறையில் 10 பேர்; ஊர்க்காவல் படையில் ஐந்து பேர்; விரல் ரேகைப் பிரிவில் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்கள் மந்திரமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர், கடந்த ஆண்டு டிசம்பர், 18ம் தேதி இரவு, தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில், படகு வாயிலாக, 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி, 'அண்ணா வீரதீர பதக்கம்' வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.