உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மைக்கா... ஆள விடுங்கப்பா! அண்ணாமலை எஸ்கேப்

மைக்கா... ஆள விடுங்கப்பா! அண்ணாமலை எஸ்கேப்

கோவை:விமான நிலையத்திலும், வெளியிடங்களிலும் பேட்டி அளிப்பதை தவிர்க்க, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.எப்போதுமே மைக் நீட்டினால், சரளமாக பதிலளிக்க தயாராக இருப்பார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்று விட்டு, டில்லியிலிருந்து கோவை வந்த அண்ணாமலையிடம், வழக்கம் போல நிருபர்கள் மைக்கை நீட்டினர்.அதற்கு அண்ணாமலை, “இனிமேல் விமான நிலையத்தில் பேட்டி வேண்டாம். எல்லாவற்றையும் முறைப்படுத்துவோம். விமானத்திலிருந்து இறங்கி வருவதற்குள், ஏதாவது நடந்து விடும். கோவை கட்சி ஆபீசில் சந்திக்கலாம்.“தினமும் மாலையில் செய்தி அனுப்பி வைக்கப்படும். முறைப்படி உங்களுக்கு மாவட்ட தலைவர், முன் கூட்டியே தகவல் அளிப்பார். கட்சி அலுவலகத்தில் தான் இனி பேட்டிகள் இருக்கும்,” என தெரிவித்தபடி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை