உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் பிரசாரத்தை துவக்க அமைச்சர் உதயநிதி உத்தரவு

தேர்தல் பிரசாரத்தை துவக்க அமைச்சர் உதயநிதி உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க.,வினர் இப்போதே பிரசாரத்தை துவக்க வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி பேசினார்.தி.மு.க., இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில், தி.மு.க., பிரமுகர் திராவிட மணியின் இல்லத் திருமணம் நேற்று நடந்தது. மணமக்களை வாழ்த்தி, உதயநிதி பேசியதாவது: கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் கட்சி தலைவராக, முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த நாளில் இந்த திருமணம் நடப்பது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. திராவிட மாடல் அரசு, எண்ணற்ற மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீங்கள் அனைவரும் தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் அனைத்தையும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் உள்ளன. எனவே, இப்போதே தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க.,வினர் துவக்க வேண்டும். மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி அமைய உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஆக 29, 2024 13:02

உதயநிதி உத்தரவு? இந்த உத்தரவு அமைச்சராகவா அல்லது தற்காலிக முதல்வராகவா...???


Mr Krish Tamilnadu
ஆக 29, 2024 10:11

எந்த திட்டங்களை எடுத்து கூறுவீர்கள். விஜய் சைக்கிளில் வந்ததை, பெட்ரோல் விலையை கண்டித்து என ஓட்டு வாங்குனீர்களே அதையா?. பெட்ரோல் விலையால் பைக்கை பெட்ரோல் பங்கில் விட்டு செல்லும் விளம்பரம் செய்தீர்களே அதையா?. நீட் தேர்வு என்ற வார்த்தையே இல்லாமல் செய்த, சாதனையை யா?. திமுக பைக் அணியை வைத்து படம் காட்டியதை யா?. இலவச பயண சீட்டை வலுக்கட்டாயமாக தந்து, பஸ்ஸில் பெண்களின் மரியாதை குறைத்து வீட்டீர்களே, காலை உணவு, இல்லம் கல்வி என திட்டங்களால், வீட்டில் இருந்த பெண்களை முன் அனுபவமே இல்லாமல் சொந்தமாக செலவு செய்து தடுமாறுகிறார்களே அதையா?. இவைகளை உங்களுக்காக எதிர்கட்சிகளே கூறி விடும். கவலை வேண்டாம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 29, 2024 09:50

அந்தக் கொசு சனாதனம் இருக்குங்களே .... அதை ஒழிப்பதா சொன்னீங்களே ..... கோவில் கோவிலாக ஏறி இறங்கிய உங்கள் தாயார் மூலமாக கடவுளுக்கு விண்ணப்பித்தீரா ????


Mr Krish Tamilnadu
ஆக 29, 2024 09:50

என்ன


Just imagine
ஆக 29, 2024 06:57

கண்ணா செங்கல் தூக்க ஆசையா ...


Duruvesan
ஆக 29, 2024 05:40

234ம் தீயமுக கெயிக்கும் உறுதியாக. அடிமைகள் ஓட்டு என்றும் தீயமுகவுக்கே


சமூக நல விரும்பி
ஆக 29, 2024 05:40

கனவு என்றும் நனவு ஆகாது


Kasimani Baskaran
ஆக 29, 2024 05:25

அடுத்து தீம்கா விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்கள் கூட கொண்டாடும். பொது மக்களுக்கு சனாதன ஒழிப்பு மறந்துவிடுமளவுக்கு நாடகம் போடுவார்கள். தமிழன் இந்த முறையாவது ஏமாறாமல் இருக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை