உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு கேட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்- அதிர்ச்சி பதில்

வீடு கேட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்- அதிர்ச்சி பதில்

சென்னை:''தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வாயிலாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு வீடு வழங்க வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா கோரிக்கை விடுத்தார்.அவர் பேசி முடித்ததும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''காங்கிரஸ் கொறடாவான பின் நன்றாக பேசுகிறீர்கள். உங்கள் அப்பா சொல்லி கொடுத்தாரா?'' என கேட்க, சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.அதைத் தொடர்ந்து பேசிய வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, ''எம்.எல்.ஏ.,க்களுக்கு வீடு வேண்டும் என ஹசன் மவுலானா கேட்டார். வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட, 3,500க்கும் அதிகமான வீடுகள் விற்காமல் உள்ளன. அதன் விலைப் பட்டியலை தருகிறேன். எம்.எல்.ஏ.,க்கள் வாங்கிக் கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ