உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகன் மாநாடு: தொழில் வர்த்தக சபைக்கு வாய்ப்பு

முருகன் மாநாடு: தொழில் வர்த்தக சபைக்கு வாய்ப்பு

சென்னை:திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில், வரும் 24 மற்றும் 25ம் தேதி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டை வணிக நோக்கமற்ற நிறுவனம் அல்லது அமைப்புடன் இணைந்து நடத்த, ஆறு வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இக்குழு, நிகழ்வு பங்களிப்பாளராக, தென்னிந்திய தொழில் வர்த்தக சபையை தேர்வு செய்ய, அரசுக்கு பரிந்துரை செய்தது.அதை ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, அறநிலையத் துறை செயலர் சந்தரமோகன் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை