உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு இருக்கணும்; மாற்றுக் கருத்து இல்லை: அண்ணாமலை பேட்டி

நீட் தேர்வு இருக்கணும்; மாற்றுக் கருத்து இல்லை: அண்ணாமலை பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: 'நீட் தேர்வு இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை' என நிருபர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில், காமராஜர் திருவுருவ படத்திற்கு தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழகம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது. காமராஜர் ஆட்சிக்கு நிகராக, மத்தியில் மோடி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wbbiyfzw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நீட் தேர்வு

தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில், அண்ணாமலை கூறியதாவது: காலை உணவுத்திட்டத்தை திராவிட மாடல் எனக் கூற முடியாது. மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும். நீட் தேர்வு இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது. தேர்வு குளறுபடிகளை ஆய்வு செய்து, மத்திய அரசு சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறது. இந்தாண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏழை, நடுத்தர மக்களுக்கு நீட் தேர்வு உதவுகிறது.

கூலிப்படை

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தைய மாணவர் சேர்க்கை தரவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூலிப்படையை ஏவி விட்டது யார்?. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. திருவேங்கடம் குற்றவாளி தான். அவரது பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதே கேள்வி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kesavan
ஜூலை 17, 2024 12:00

சாமானிய மக்களின் குடியை கெடுப்பதற்கு மாற்று கருத்து இருப்பதற்கு பிஜேபிக்கு வாய்ப்பே இல்லை அதை மனமுவந்து செய்வார்கள்


R.Varadarajan
ஜூலை 15, 2024 21:01

நீட்தேர்வு எனும் ஒரு தேர்வு இல்லையெனில் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பை கனவிலும் பெற இயலாது அந்த தேர்வினால்தான் தகுதி உடைய சில கிராம்ப்புற ஏழை எளிய மாணவர்கள் தகுதி படைத்தவர்களாக ஆகிரார்கள். இல்லையெனில் மருத்துவர்கள் , மாறன் போன்ற அரசியல்வியாதிகள், அதிகார வர்க்கத்தினர் ,மற்றும் வணிகப்பெருச்சாளிகள், பணமூட்டைகள் ஆகியோரின் வாரிசுகள் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எல்லா இடங்களையும் பணத்தை வாரி இறைத்து வளைத்துப்போட்டுவிடுவானுக. தகுதி படைத்திருந்தாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு என்பது எட்டாக்கனியே பப்பு போன்ற அதிமேல்தாவிகள் நீட் தேர்வு பணம்படைத்தவர்களுக்கே என மக்களை தவறாக மடை மாற்றுகிரர்கள். மாறாக நீட் தேர்வு இல்லையெனில் தான் பணம் படைத்தவர்கள் இடங்களை விலைக்கு வாங்க முடியும். தீட் தேர்வு உள்ளதால்தான் மாறன் போன்றோரின் வாரிசுகள் தகுதி இல்லாமையால் மருத்தவப்படிப்புக்கு வழி இல்லுமல் போகிரது . நீட மேர்வு இல்லையெனில் மாறன் மகள் இந்நேரம் மிட்டாய்துட்டு கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கமுடியும். தகுதிஉள்ள ஏழை மாணவர்ரகளுக்கு நீட்தேர்வு ஒரு வரப்பிரசாதம்


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2024 17:05

நீட் தேர்வு என்று ஒன்றில்லையென்றால் கிட் தேர்வு சாட் தீர்வு மேட் தீர்வு என்று ஏதோ ஒரு தீர்வு இருக்கும் இவ்வளவு தான். இனிமேலும் யாரும் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்ல வேண்டாம்


Veeraraghavan Jagannathan
ஜூலை 15, 2024 16:37

தமிழிசை ஒரு நல்ல டாக்டர் இல்லை.


Mettai* Tamil
ஜூலை 15, 2024 15:57

நீட் தேர்வு வேண்டாம் என்றால் ,அவர்கள் நடுத்தும் மருத்துவ கல்லூரிலிருந்து தேர்தல் செலவிற்கு பெரும் தொகை வருகிறது என்று அர்த்தமா ? தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தைய மாணவர் சேர்க்கை தரவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். செய்வார்களா ?


Vathsan
ஜூலை 15, 2024 15:42

எப்படி ஏழை மாணவர்களுக்கு உதவும்னு கொஞ்சம் புரிஞ்சால் சரி தான்..


Azar Mufeen
ஜூலை 15, 2024 15:39

காமராஜர் ஆட்சியுடன், மோடியின் ஆட்சியை ஒப்பிட்டு பேசவில்லை?


S. Narayanan
ஜூலை 15, 2024 15:18

நீட் தேர்வு இருந்தால் ஏழை மாணவர்களும் டாக்டர். ஆக முடியும். நீட் ரத்து செய்தால் திமுக அமைச்சர்கள். டாக்டர் ஆகலாம் நிறைய லஞ்சம் கொடுத்து.


Iyeluswamy Chinnasamy
ஜூலை 15, 2024 14:49

காமராஜர் காலத்தில் கல்வி நன்றாக இருந்தது. அப்போது நீட் இல்லை. தமிழிசை சவுந்தரராஜன் அம்மா டாக்டர் படிக்கும் போது நீட் இல்லை, தமிழிசை நல்ல டாக்டர் இல்லையா? நீட் மூலமாக வந்தால் தான் நல்ல டாக்டரா?


K.Muthuraj
ஜூலை 15, 2024 18:58

தமிழகத்தில் முதலில் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வு தமிழக அரசே நடத்தியது. அப்பொழுது உருவான மருத்துவ மாணவர்கள் கூட சற்று தரத்தில் இருந்தனர். நுழைவுத்தேர்வு இன்றி வந்த மாணவர்களில் பெரும்பாலானோர் குப்பை. இவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் மருத்துவ ஆசிரியர்கள் தலையில் அடித்துக்கொள்வார்கள். ஆங்கிலம் தெரியாது. பொது அறிவு கிடையாது. இயற்பியல் சாதனங்களின் அடிப்படை புரிந்து கொள்ள தடுமாற்றம். கெமிஸ்ட்ரி புரிந்து கொள்ளும் திறமின்மை. இவையே இன்றைய சமசீர் மாணவனின் நிலைமை.


Dharmavaan
ஜூலை 15, 2024 19:22

அப்போதிருந்த யோகியர்கள் /தியாகிகள் இப்போது இல்லை .எல்லாம் திருடர்கள் களவாணிகள் எனவே தரம் கீழே போய்விட்டது


Velan Iyengaar
ஜூலை 15, 2024 14:43

காமராஜருக்கு மரியாதை செலுத்தும்போது அவர் கொண்ட கொள்கைகளுக்கும் மரியாதையை செலுத்துவாரா ???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை