உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்.சி.பி., விசாரணைக்கு இயக்குனர் அமீர் இன்று ஆஜர்

என்.சி.பி., விசாரணைக்கு இயக்குனர் அமீர் இன்று ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்குடன் இருந்த தொடர்பு குறித்து, டில்லியில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன், திரைப்பட இயக்குனர் அமீர் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.டில்லியில் மார்ச் 9ல், தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரை, 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, இன்று டில்லியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, 'சம்மன்' அனுப்பினர்.'விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் தரப்பு நியாயங்களையும் உண்மைகளையும், அதிகாரிகளிடம், 100 சதவீதம் எடுத்து வைத்து வெற்றியுடன் திரும்பி வருவேன்' என, அமீர் கூறி வருகிறார். இவர், டில்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன், இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார். ஏற்கனவே, அமீருடன் இருந்த தொடர்பு குறித்தும், போதை பொருள் கடத்தல் தொழில் குறித்து அமீருக்கு தெரியும் என்றும், ஜாபர் சாதிக் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், அமீருடன் பல மணி நேரம் விசாரணை நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

angbu ganesh
ஏப் 02, 2024 09:39

அதானே இவன தூக்குல கூட போடலாம்


ஆரூர் ரங்
ஏப் 02, 2024 09:30

அப்போ ஜாஃபர் தயாரிக்கும் மற்றொரு படத்தின் இயக்குனி எஸ்கேப்பா?


பேசும் தமிழன்
ஏப் 02, 2024 08:58

போதைப்பொருள் விற்ற பணதில் தான் ....இறைவன் மிகப்பெரியவன் என்ற படம் எடுத்தீர்களா ??!


HoneyBee
ஏப் 02, 2024 08:28

எதுக்கு வீணா விசாரணை என்று இழுத்தடிப்பு இவன் செய்த எல்லா செயல்களும் வெட்ட வெளியில் உள்ளது ஏன் நீதிமன்றம் இதை கருத்தில் கொள்ள வில்லை


Suresh sridharan
ஏப் 02, 2024 07:50

இவனையெல்லாம் உடனே கைது பண்ண மாட்டாங்க ஏன்னா தமிழ்நாட்டுல இவனுக்கு சப்போர்ட் பண்றதுக்கு ஒரு குரூப் அலைஞ்சிட்டு இருக்குது சரியான துருப்புச்சீட்டு ஏதாவது வேணும்ல இப்ப கிடைச்சிருக்கும் இனி இருக்கு எல்லா எல்லா நோம்பியும்?? குழந்தை குட்டிகள் எல்லாம் குட்டிச்சுவர் ஆயிட்டு இருக்கு


VENKATASUBRAMANIAN
ஏப் 02, 2024 07:25

திருட்டு கும்பல் இவர் போல் இன்னும் நிறையவே உள்ளனர் அவர்களையும் உள்ளே தள்ள வேண்டும்


ராமகிருஷ்ணன்
ஏப் 02, 2024 06:46

திஹார்ருக்கு அனுப்பி நொங்கெடுங்க சார். களவாணி பயலுக்கு ஓவராய் வாயீ


ramani
ஏப் 02, 2024 06:41

மாட்ட வேண்யியவங்க இன்னும் இருக்காங்க அவர்களை அணுக யோசிக்க கூடாது


Kasimani Baskaran
ஏப் 02, 2024 05:52

உள்ளே தூக்கி வைத்து நொங்கெடுத்தால் அந்த கோடி பற்றி பதில் சொல்ல வாய்ப்புண்டு எந்தக்கொம்பனாக இருந்தாலும் தூக்கு உள்ளே வைக்க வேண்டும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் போல போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் இல்லை என்றால் ஏற்கனவே டாஸ்மாக்கில் மிதக்கும் தமிழன் போதையில் மூழ்கி மொத்த சமுதாயத்துக்கும் பயனில்லாமல் போய்விடுவான்


தயா
ஏப் 02, 2024 05:42

அது என்னடா வெற்றியுடன் திரும்பி வருவேன்!!! உன்ன என்ன நிலாவுக்கா அனுப்புறாங்க?? போறது போதைபொருள் கடத்தல் விசாரனைக்கு நுங்கு எடுப்பாங்க ஞாபகம் வச்சிக்கோ!!!


RAJ
ஏப் 02, 2024 09:27

Hahahaha


மேலும் செய்திகள்











புதிய வீடியோ