உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் ரூ.106 கோடியில் காவிரி ஆற்றில் புதிய பாலம்

திருச்சியில் ரூ.106 கோடியில் காவிரி ஆற்றில் புதிய பாலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி, சிந்தாமணி பகுதியில் இருந்து, திருச்சி நகரை, ஸ்ரீரங்கத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இரும்பு பாலம் பழுதடைந்ததால், 1976ம் ஆண்டு, காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. அந்த பாலம் தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.இடையில் பாலம் பழுதடைந்து, சீரமைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அதே இடத்தில் மேலும் ஒரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. புதிய பாலம் மேலசிந்தாமணியில் இருந்து, மாம்பலச்சாலை வரை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.எஸ்.டி., இன்பிரா நிறுவனத்திடம் புதிய பாலம் கட்டும் பணி ஒப்படைக்கப் பட்டுள்ளது. மொத்தம், 106 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டுமான பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா, பூமிபூஜையுடன் நடந்தது. அமைச்சர்கள் நேரு, மகேஷ் பங்கேற்றனர். புதிய பாலப்பணிகளை, 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

nb
ஜூலை 13, 2024 17:27

காவிரில தண்ணி எப்ப வரும்


Mani . V
ஜூலை 13, 2024 16:07

கொள்ளையடிக்கப் அப்படித்தான் அறிவிக்கணுமா? சரி, பாலம் 56 கோடிக்கு. 50 கோடி வீட்டுக்கு. நீண்ட ஆயுளுடன் இருக்க அந்த கருணாநிதிதான் ஸாரி கடவுள்தான் அருள்புரிய வேண்டும்.


KRISHNAN R
ஜூலை 13, 2024 16:05

எப்படி இருந்தாலும்..தீபாவளிக்கு.... ரெடி பண்ணி விட மாட்டோமா


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 10:50

கட்ட கட்ட காசு குவியும். சென்னை உஸ்மான் சாலையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அநாவசிய மேம்பாலத்தை இப்போது அவர்கள் ஆட்சியிலேயே இடித்துக் கட்டுகிறார்கள். இரண்டு பெரும் தீவிபத்து ஏற்பட்ட பகுதி ரங்கநாதன் தெருவில் சர்வீஸ் சாலை மூலம் தீயணைப்பு வாகனங்கள் செல்வது கூட கஷ்டம் என்கிறார்கள். ஆபத்தை அறியாமல் மக்கள் குவிக்கிறார்கள். தீயமுகவுக்கோ காசு பணம்.துட்டு. மணி மணி.


சதாசிவம்,திருச்சி
ஜூலை 13, 2024 09:21

உங்களோட திராவிட மாடல் விடியல் ஆட்சி முடிய இன்னும் ரெண்டு வருஷம் இருக்குது அதுவரைக்கும் இப்ப இருக்கிற பழைய பாலமே இருந்துட்டு போகட்டும் நாங்க எப்படியாவது அந்த பாலத்துல அட்ஜஸ் பண்ணி போய்ட்டு வந்துக்கிறோம் அதுவரைக்கும் நீங்க சும்மா இருந்தாலே உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்!


Barakat Ali
ஜூலை 13, 2024 08:55

பின்ன ???? தலைமைக்குடும்பம் நடத்துற சிமெண்ட்டு கம்பெனிக்கு பிசினஸ் கொடுக்க வேணாமா ???? அதிகாரத்துல இருக்கும்போதே சுரண்டி சுரண்டி சாப்பிட்டாத்தானே அதிகாரத்துல இல்லாதபோது வர்ற செலவுகளை சமாளிக்கலாம் ????


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 10:43

இப்போ அந்த சிமெண்ட் ஆலை பிர்லா கைக்குள் போய் விட்டதாம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் முதன்முதலாக கருணாநிதி குளித்தலை தேர்தலில் நின்ற போது செய்த பிரச்சார முழக்கம். //காங்கிரஸ் ஆட்சி இனிக்காது.அது டாட்டா பிர்லா கூட்டாளி. பாட்டாளிக்கு பகையாளி.//


Sundar
ஜூலை 13, 2024 08:48

பூமி பூஜை திமுக அரசுக்கு பிடிக்காதே...?


N Sasikumar Yadhav
ஜூலை 13, 2024 08:46

நான்கூட L


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை