மேலும் செய்திகள்
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago | 9
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
3 hour(s) ago | 4
சென்னை:ஜெர்மன் பல்கலையுடன் இணைந்து, நீர் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மாற்றம் குறித்து, முதுநிலை படிப்பு நடத்தப்படும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஜெர்மனியில் உள்ள ஆசென் மற்றும் டிரெஸ்டென் ஆகிய இரண்டு பல்கலைகளுடன் இணைந்து, முதுநிலை படிப்பை கூட்டாக நடத்த, ஐ.ஐ.டி., முயற்சி மேற்கொண்டுள்ளது. நீர் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மாற்றம் குறித்த பாடப்பிரிவில், இந்த படிப்பு நடத்தப்படுகிறது.இந்த படிப்புக்கான சேர்க்கை மூன்று கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படும். படிப்பில் சேரும் மாணவர்கள், சென்னை ஐ.ஐ.டி.,யில் கல்வி ஆண்டை துவக்குவர். பின், தாங்கள் விரும்பும் பல்கலையில் ஆய்வறிக்கை தயாரிக்க வாய்ப்பளிக்கப்படும்.இதுகுறித்து, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறுகையில், ''ஒரு குறிப்பிட்ட நாடு அளவில் இல்லாமல், சர்வதேச அளவில் நீடித்த வளர்ச்சியை இலக்காக வைத்து, இந்த பாட திட்ட பயிற்சி அளிக்கப்படும். சர்வதேச அளவில் சுற்றுச்சூழலில் நீர் பாதுகாப்பு சவால்கள், காலநிலை பிரச்னைகள் ஆகியன குறித்த, பாடம் கற்பிக்கப்படும்,'' என்றார்.மாணவர் சேர்க்கை விதிகள், தேர்வு முறை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை, ge.iitm.ac.in/I2MP/#popular-programs என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 9
3 hour(s) ago | 4