அவகாசம்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க, ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் ஆகஸ்ட், 1ல் துவங்கியது; நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையை ஏற்று, இன்று மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.கூடுதல் சர்சார்ஜ்
தமிழகத்தில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள், வெளி சந்தையிலும் வாங்கும் மின்சாரத்தை எடுத்து வர, மின் வாரிய வழித்தடத்தை பயன்படுத்துகின்றன. இதற்காக, 'வீலிங் சார்ஜ், சர்சார்ஜ்' உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தற்போது, யூனிட்டிற்கு சர்சார்ஜ், 1.96 ரூபாயாக உள்ளது. நேற்று முதல் யூனிட்டிற்கு, 29 காசு கூடுதல் சர்சார்ஜ் வசூலிக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பிஎப் வட்டி நிர்ணயம்
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், ஜி.பி.எப்., எனப்படும் பொருளாதார வைப்பு நிதிக்கு, ஜூலை 1 முதல் செப்., 30 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்தது.அதை பின்பற்றி, மாநில அரசும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து உள்ளது.