உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காசு கொடுத்தா கவுன்சிலிங் வேண்டாம்; செவிலியர் பணி மாறுதலில் புரளும் பணம்

காசு கொடுத்தா கவுன்சிலிங் வேண்டாம்; செவிலியர் பணி மாறுதலில் புரளும் பணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பணிமூப்பு குறைவாக உள்ள செவிலியர்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்குவதாக, அனைத்து செவிலியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலுார், நாகை ஆகிய மாவட்டங்களில், 11 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் புதிதாக துவங்கப்பட்டன. இங்கு, நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில், பொது கவுன்சிலிங் நடத்தாமல், செவிலியர்களுக்கு தன்னிசையாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முறைகேடு

தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் பால் பாண்டியன் கூறியதாவது:காலி இடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில் காத்திருக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு, கவுன்சிலிங் வாயிலாக பணியிட மாறுதல் நடத்திய பின் தான், தேர்வு செய்யப்பட்ட எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு பணியிட மாற்ற கவுன்சலிங் நடத்த வேண்டும். ஆனால், விதிகளைப் பின்பற்றாமல், பணிமூப்பு குறைவாக உள்ள செவிலியர்களுக்கு, முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விருதுநகர், திண்டுக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு, இதுவரை கவுன்சிலிங் நடத்தாமல், முறைகேடாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

இடைத்தரகர்கள்

அதேபோல், பிப்., மார்ச் மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டதால் உருவான, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தாமல், பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது. சில சங்கங்கள், இடைத்தரகர்கள், செவிலியர்களிடம் விலை பேசி பணம் பெற்று, இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்களை, பணிமூப்பு அடிப்படையில் காத்திருக்கும் செவிலியர்களுக்கு பொது கவுன்சிலிங் வாயிலாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S Sivakumar
ஜூலை 21, 2024 10:15

வெட்கத்தை விட்டு இப்படி அரசியல் செய்யும் விசமிகள் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் இரும்பு கரங்களால் அழிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 09:46

மெரிட் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சீட் கிடைத்து அரசு ஸ்டைபண்டு உதவியுடன் ஏழைகள் நர்சிங் படிக்கிறார்கள். 90 சதவீதம் பிராக்டிகல் படிப்பு. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம். அப்படிப்பட்ட இவர்களுக்கு முன்னுரிமை தராமல் தரமற்ற தனியார் அரைகுறை கல்லூரிகளில் படித்தவர்களுக்கு 95 சதவீத அரசு பணிகளில் நியமனம். ஆக துவக்கத்திலேயே துட்டு புரளும்.


Palanisamy Sekar
ஜூலை 21, 2024 07:21

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ,அப்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்தான். மாறுதலுக்கு மட்டுமல்ல பணம் புரள்வது..வேலை வாங்கி கொடுப்பதற்கும், அதனை செம்மையாக செய்துகொடுக்கவும் மாவட்டங்களுக்கும் வட்டங்களுக்கும் அரசு ஊழியர் சங்கங்களை சார்ந்தோருக்கும் கைவந்த கலை. முறைகேடாக என்னென்ன செய்திட முடியுமோ அவ்வளவையும் மிக கச்சிதமாக செய்துகொடுப்பார்கள் என்பது தமிழகத்தில் திமுகவுக்கு கொடுக்கும் பாராட்டுபத்திரம். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது எவனுக்கும் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்களாம்.. அவ்வளவையும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே சென்று சேரும் வகையில் எம் எல் ஏக்களும் வட்டம் மாவட்டங்களும் செய்துகொடுப்பார்களாம். கீழ்மட்ட தொண்டனுக்கு எப்போதுமே சிறிய துண்டுவெல்லம் மட்டுமே. அதனால்தான் திமுகவில் இருப்பவர்கள் பொறுமையாக காத்திருப்பார்களாம். ஆட்சி போனாலும் கூட கட்சி மாற மாட்டார்கள். நிச்சயம் ஆட்சி பிடித்ததும் சகட்டுமேனிக்கு சம்பாதிக்க முடியும் என்கிற எண்ணத்தில் இதுபோன்ற ஊழல்கள் தொடர்கதையாக இருக்கும். அது தமிழகத்தை பிடித்த .... கொடுப்பவர்களுக்கே வருத்தமில்லை. காரியமாகிறதா என்று பார்ப்பார்கள்..அதனால் என்ன எழுதினாலும் திருத்தவே முடியாது தமிழகத்தை


xyzabc
ஜூலை 21, 2024 05:19

மா சு வாழ்க


மேலும் செய்திகள்





புதிய வீடியோ