உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுநிலையாளர் போர்வையில் எதிர் பிரசாரம் எடுபடாது: வானதி

நடுநிலையாளர் போர்வையில் எதிர் பிரசாரம் எடுபடாது: வானதி

கோவை : கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதியின் அறிக்கை:லோக்சபா தேர்தலில், இதுவரை ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்புகளில், பா.ஜ.,வுக்கு மீண்டும் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றே தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கணிப்புகள் பா.ஜ.,வுக்கு, 350 முதல் 400 இடங்கள் வரை கிடைக்கும் என்றே கூறுகின்றன.ஆனால், 'பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காது. வட மாநிலங்களிலும் பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த இடங்கள் வராது' என்ற ஒரு பிரசாரத்தை, நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ற பெயரில் சிலர் முன்னெடுத்துள்ளனர்.'இண்டியா' கூட்டணிக் கட்சிகளை விட, அக்கூட்டணி வெற்றிக்கு நடுநிலையாளர்கள் போர்வையில் உலா வருபவர்கள் அதிகம் உழைக்கின்றனர். பா.ஜ.,வுக்கு எதிராக அன்றாடம் அவதுாறுகளை, கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர்.இதையெல்லாம் பிரதமர் மோடி, மக்களிடம் அம்பலப்படுத்தி வருகிறார். இதை பொறுக்க முடியாமல், பா.ஜ.,வுக்கு எதிரான பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில், சில தீயசக்திகள் ஈடுபட்டுள்ளன.மக்கள் சக்திக்குமுன், எந்த பொய்ப்பிரசாரமும் எடுபடாது. மக்களின் ஆதரவோடு, சதித் திட்டங்களை எல்லாம் துாள்துாளாக்கி, 400க்கும் அதிகமான இடங்களில் வென்று, மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ