உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை: டி.ஜி.பி.,

10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை: டி.ஜி.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்., 7ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுதும் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். போலீஸ் உதவி கமிஷனர், ஆர்.டி.ஓ., அல்லது துணை கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும்தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். பொது இடங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறுவது அவசியம்ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்ற விபரத்தையும் கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்க கூடாதுஇதர மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது. விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் பட்டாசு வெடிக்க கூடாதுவிநாயகர் சிலைகளை மினி லாரி, டிராக்டர் வாயிலாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக்கூடாது

போலீசாருக்கு அறிவுறுத்தல்கள்

சமூக விரோதிகள் சிலைகளை சேதப்படுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும். பதற்றமான இடங்களில் சிலைகள் வைத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்பதால் அனுமதிக்க கூடாது. மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது.மற்ற வழிப்பாட்டு தலங்களை ஊர்வலம் கடக்கும் போது, பட்டாசுகளை வெடிக்கவும், மேள தாளங்களை இசைக்கவும் அனுமதிக்க கூடாது. ஊர்வலம் செல்லும் பாதையில் உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பதையும், கொடிகள் கட்டுவதையும் தடுக்க வேண்டும்.பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளை, வரும் 30ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

karutthu
ஆக 22, 2024 09:26

ஆரம்பித்தது விட்டார்கள் ..விநாயகர் சிலிலை வைப்பதற்கு 1000 கண்டிஷன் போட்டுவிட்டார்கள் ஏனென்றால் இது தான் திராவிட மாடல் ஆட்சி ..பேசாமல் இந்துக்களின் பண்டிகை அனைத்தும் தமிழகத்தில் கொண்டாட தடை விதித்து விடுங்கள் பிரச்சனையே இல்லை


Matt P
ஆக 22, 2024 03:34

விநாயகருக்கு இப்படி ஒரு நிலைமை. கடவுளையே ஒரு குறிப்பிட்ட அடிக்கு மேலே இருந்திரக்கூடாதுன்னா மனுஷன் செய்யும் பாவத்துக்கு கடவுளுக்கு கெட்ட பெயர். கடவுளுக்கே கட்டுப்பாடு


Bahurudeen Ali Ahamed
ஆக 21, 2024 13:12

சகோதரர்களே பண்டிகை, திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லாம் சொந்தங்கள் ஒன்றுகூடவும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் சந்தோஷமாக வாழவும்தான், எல்லா மதத்திலும் பண்டிகைகள் இருக்கின்றன அதை மற்றவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் கொண்டாடினால் அனைவருக்கும் நலம்.


sugumar s
ஆக 20, 2024 16:59

Similarly for other religions such conditions of height etc., to be applied for statues or structures in vehicles during religious processions. dont target only hindus


Naga Subramanian
ஆக 19, 2024 15:53

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க.... இன்னும் சிறிது காலத்தில், திராவிட ஆட்சி இரகுட்டநாள், இவர் சொன்னதை, தினசரி நாள்காட்டியில், இராசி பலனுக்கு பதிலாக இந்த மாதிரியான செய்திகளை பிரசுரித்து விடுவார்கள் போலிருக்கிறது.


Yasararafath
ஆக 18, 2024 15:53

ஊர்வலத்தை முழுவதும் தடை செய்தால் நல்லது.


Sakthi,sivagangai
ஆக 18, 2024 18:49

ஏன் உனக்கு இந்த வன்மம்


Naga Subramanian
ஆக 19, 2024 15:49

சரியான ....


Sathyanarayanan Sathyasekaren
ஆக 20, 2024 04:12

உன்னை பாக்கிஸ்தான் விரட்டி அடிக்காமல் இங்கே ஹிந்துஸ்தானில் இருக்கவிட்டதே தப்பு. உன்னை போன்ற ஆட்களால் மோகன்தாஸ் கண்டி, நேரு மீது கோபம் அதிகரிக்கிறது.


பேசும் தமிழன்
ஆக 18, 2024 13:59

இந்து பண்டிகை வந்தாலே ....இவர்கள் எல்லாம் வந்து விடுகிறார்கள் ...எப்படி அதற்கு இடையூறு செய்யலாம் என்று.....இதே போல மாற்று மத பண்டிகைகளில் ஏன் மூக்கை நுழைப்பது இல்லை ??? இந்துக்கள் இளிசவாயர்கள் ....அப்படி தானே ????


எஸ் எஸ்
ஆக 18, 2024 13:26

இந்து மதத்தை இழிவு படுத்தும் கட்சிக்கு ஓட்டு போடுவோம். அவர்கள் கிட்டேயே போய் எங்கள் மத வழிபாடு நடத்த அனுமதி கேட்டு கெஞ்சுவோம்


Ramesh Sargam
ஆக 18, 2024 13:09

ஐம்பது அடி, நூறு அடிக்கு அரசியல்வாதிகளின் கட்அவுட், சினிமா நடிகர்களின் கட்அவுட்க்கு அனுமதி கொடுப்பார்கள். ஆனால் கடவுள் சிலை வைக்க அனுமதி கொடுக்கமாட்டார்கள்.


V RAMASWAMY
ஆக 18, 2024 12:57

இந்துக்களுக்கும் மட்டும் சட்ட thittangalaa?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ