உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாய நிலத்தை பதிய மறுக்கக்கூடாது: சார்- பதிவாளர்களுக்கு புதிய உத்தரவு

விவசாய நிலத்தை பதிய மறுக்கக்கூடாது: சார்- பதிவாளர்களுக்கு புதிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மனையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை, பத்திரப்பதிவு செய்ய மறுக்கக்கூடாது' என, சார் பதிவாளர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சார்-பதிவாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில், உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல், பெரும்பாலான சார்- பதிவாளர்கள் செயல்படுவதாக புகார்கள் வருகின்றன.சொத்துக்கள் பரிமாற்றம் செய்ய ஆட்சேபம் தெரிவித்து, யாராவது மனு கொடுத்தால், அதை ஏற்று பதிவுக்கு வரும் பத்திரத்தை நிராகரிக்க கூடாது. மனுவில், சான்று ஆவணங்கள் முழுமையாக உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். தடை மனு கொடுப்பவருக்கு, குறிப்பிட்ட சொத்தில் உரிமை கோரவும், ஆட்சேபம் தெரிவிக்கவும், சட்டப்பூர்வ ஆதாரம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். உரிய திருப்தி ஏற்படாத நிலையில் பத்திரங்களை நிராகரிக்க கூடாது.சொத்தின் மதிப்பு குறைவாக குறிப்பிடப்பட்டு இருந்தால், உரிய விசாரணை நடத்தி, 47 - ஏ விதிப்படி மேல்முறையீட்டு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதைவிடுத்து, வழிகாட்டி மதிப்பை விட குறைவான மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி, பத்திரத்தை நிராகரிக்க கூடாது

விற்பனை சான்றிதழ்

கடனில் மூழ்கிய சொத்துக்களை, கடனீட்டு சட்டத்தின்படி வங்கிகள் ஏலம் விடுகின்றன. இதை ஏலத்தின் எடுப்பவருக்கு, விற்பனை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுபோன்ற விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்ய மறுக்கக்கூடாது. பதிய மறுப்பதாக புகார் வந்தால், சார்- பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.பதிவுக்கு வரும் சொத்துக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் முறையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதேநேரம், ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, பத்திரத்தை நிராகரிக்க கூடாது.வருவாய் ஆவணங்களான பட்டா உள்ளிட்ட விஷயங்களை சரிபார்க்க வேண்டும்; பொதுமக்களை அலைகழிக்கக் கூடாது.விவசாய நிலங்களை மனைப்பிரிவாக பதிவு செய்யக்கூடாது. ஆனால், குறைந்த பரப்பளவு விவசாய நிலங்களை, விவசாய நிலமாக விற்க, வாங்க தடை இல்லை. சாலையை ஒட்டியுள்ளது என்று கூறி, குறைந்த பரப்பளவில் கைமாறும் விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுக்கக்கூடாது. இந்த விஷயங்களில், சார்-பதிவாளர்கள் முறையாக செயல்படுவதை, மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jysenn
ஜூலை 13, 2024 10:30

Tirunelveli district Panakudi sub registrar office is a den of corruption. An amount more or less equal to the registration fee is to be given as bribe. The whole jurisdiction is affected by the odious corruption of the lady Officer. Once the corrupt officials acted secretly but this lady is demanding ly without any modesty. Please take action.


Joe Rathinam
ஜூலை 13, 2024 09:44

Registration fee based on guideline value is one of root causes of black money and corruptions especially in real-estate busines in India since the difference between market value and guideline values are mostly transacted in cash even though cash transactions more than two lakhs are banned in India. Hence registration fee should be collected based on Market Values instead of guideline values.


GMM
ஜூலை 13, 2024 09:18

பத்திர பதிவில் அதிக குளறுபடி உள்ளதை பல உத்தரவுகள் உறுதி செய்து வருகின்றன. மூல பத்திர பதிவு, பட்டா, வீட்டுவரி, மின் இணைப்பு ... ஆரம்பம் முதல் வரிசையாக விவரம் பதிய வேண்டும். சொத்து வாங்குபவர், விற்பவர் ஆதார், வருமான வரி விவரம் பதிந்த பின் , பண பரிமாற்றம் வங்கி மூலம் நிகழ்ந்தால் பல தவறுகள் குறையும். கட்சியினருக்கு தேவையான பல உத்தரவும் பிறப்பிக்க படுகின்றன.? பழைய பதிவுகள் மாவட்ட அளவில் 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இதற்கு தனி பிரிவு தேவை. வழக்கில் வரும் சொத்து, தாசில்தார் கூட்டு பொறுப்பில் கட்டண அடிப்படையில் இருக்க வேண்டும். திராவிட பத்திர பதிவு இலவச பட்டா, பல முறைகேடுகள் நிறைந்தவை. வழக்கிலும் ஏமாற்று வேலை அதிகம். தமிழகத்தில் சொத்து பராமரிப்பது கடினம்.


Minimole P C
ஜூலை 13, 2024 07:42

words to deaf ears.


மேலும் செய்திகள்