உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது:பழனிசாமி

ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது:பழனிசாமி

கரூர் :ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது என கரூரில் நடந்த பொது கூட்டத்தில் பழனிசாமி பேசினார். கரூர் தோரணம்பட்டியில் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து இ.பி.எஸ் பேசியதாவது: ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது.ஒரே மேடையில் விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா? அதிமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையை திமுக அரசு வழங்குகிறது. ஆயுட்காலம் வரையில் சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி.ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அதிமுக தான்.தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே ஸ்டாலின் செயல்படுகிறார் திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. கரூரில் செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர்இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதை பொருள் விற்பனையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக திமுக பச்சை பொய் கூறுகிறது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மோகனசுந்தரம்
ஏப் 04, 2024 11:39

எட்டப்ஸ் ஒருத்தனை போதும் அண்ணா திமுகவை அழிப்பதற்கு.


முருகன்
ஏப் 04, 2024 05:59

அது அழித்து விடும்


Jagan (Proud Sangi)
ஏப் 03, 2024 23:42

அதற்க்கு தான் நான் இருக்கிறேன் மைண்ட் வாய்ஸ்


தாமரை மலர்கிறது
ஏப் 03, 2024 20:46

தமிழகத்தில் திருடிக்கொண்டிருந்த இரண்டு திராவிட கழகங்களில் ஒன்றை அமித் அடக்கிவிட்டார் காட்டு யானை போன்றிருந்த அதிமுக இன்று தினகரன் பன்னீர்செல்வம் பழனியின் கவுண்டர் கட்சியாக உருமாறி ஒரு பூனை போன்று இருக்கிறது சீக்கிரம் இந்த பூனைக்கு அமித் ஷா பால் ஊற்றிவிடுவார் தேர்தலுக்கு பின் திமுக முடக்கப்டும்


Godfather_Senior
ஏப் 03, 2024 20:27

எடடப்ப பாடியாரே உங்க முதலாளி நிச்சயம் உங்களை அழிக்க மாட்டார் நீங்க அவருடைய பி டீம் தானே அதையும் எல்லோரும் அறிந்துள்ளனர்


Rathinakumar KN
ஏப் 03, 2024 20:15

யாரும் அழிக்க வேண்டாம் அதற்கு நான் ஒருவன் போதும்


Premanathan Sambandam
ஏப் 03, 2024 20:07

வேறு யாரும் தேவையில்லை நீங்களே சமாதி கட்டி விடுவீர்கள் இந்த தேர்தலுடன்


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 03, 2024 19:43

ஸ்டாலின் அதிமுகவை அழிக்க மாட்டார் ஆனால் பாஜக கட்சி அதிமுகவை பாதி அழிச்சிருச்சி மீதி பாதி 2026 தேர்தலுக்கு முன்பு முடிஞ்சிடும் அமித்ஷா அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டார்


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 03, 2024 19:43

ஸ்டாலின் அதிமுகவை அழிக்க மாட்டார் ஆனால் பாஜக கட்சி அதிமுகவை பாதி அழிச்சிருச்சி மீதி பாதி ௨௦௨௬ தேர்தலுக்கு முன்பு முடிஞ்சிடும் அமித்ஷா அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டார்


குமரி குருவி
ஏப் 03, 2024 19:29

சரி..சரி..மாநில கட்சி வரலை தேசிய கட்சி பா.ஜ.க.தான் வருது .. திராவிடத்துக்கு சமாதி கட்ட..


மேலும் செய்திகள்









புதிய வீடியோ