உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.பி.சி., தலைவர்கள் குடிசைகளை கொளுத்தவே தகுதியானவர்கள்

ஓ.பி.சி., தலைவர்கள் குடிசைகளை கொளுத்தவே தகுதியானவர்கள்

அரசியலமைப்புச் சட்டம் 16(4ஏ) என்பது, அரசு பதவிகளில், ஜாதி, மத, பாலின பாகுபாடின்றி, சமத்துவத்தை உறுதி செய்வதற்கான சட்டமாகும். கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களில், இச்சட்டம் செயல்படுத்தப்பட்டு, எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதவி உயர்வில், இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால், பல்கலைகள், ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், இயக்குனர், பேராசிரியர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என, உயர் பதவிகளில், விளிம்பு நிலை மக்கள் எவராலும், பதவி வகிக்க முடியவில்லை.இது குறித்து கேள்வி எழுப்ப, ஓ.பி.சி., தலைவர்களுக்கு தைரியம் இல்லை. மாறாக, இவர்கள் தலித் மக்களுக்கு எதிராக பேசவும், அவர்களது குடிசைகளை கொளுத்தவும் மட்டுமே, தகுதியானவர்கள். திருமாவளவன், தலைவர், வி.சி.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி