உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

மே 7, 1968திருநெல்வேலியில், 1968ல், இதே நாளில் பிறந்தவர் வெங்கட கிருஷ்ணன் எனும் கிருஷ்ணா டாவின்சி. இவரது தந்தை சுகந்தி எனும் புனை பெயரில் கதைகள் எழுதியதால் கவரப்பட்டு, தானும் எழுத்தாளராக ஆசைப்பட்டார். தெற்கு ரயில்வேயில், பயணச்சீட்டு ஆய்வாளராக பணி செய்த இவர், பல்துறை வல்லுனரான லியானார்டோ டாவின்சியை போல தானும் மாற எண்ணி, கிருஷ்ணா டாவின்சி என பெயரை மாற்றிக் கொண்டார்.'கல்கி' இதழில், 'மாயக்குதிரை' என்ற தொடரை எழுதினார். அதில் புகழ் அடைந்ததால், ரயில்வே பணியை விட்டு, 'அகிலன் சித்தார்த், வால் பையன், கின்ஸி' உள்ளிட்ட புனை பெயரில் முழுநேர எழுத்தாளராக மாறினார். 'குமுதம்' இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று, 'குமுதம் டாட் காம்' முதல் பொறுப்பாசிரியரானார். 'ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர், அச்சக்காடு, நான்காவது எஸ்டேட், இசையாலானது, காதல் சங்கிலி, பூவுலகின் கடைசிக்காலம்' உள்ளிட்ட நுால்களை எழுதினார். வயது 18 என்ற படத்தில் நடித்ததுடன், வர்ணம், சித்து பிளஸ் 2 ஆகிய படங்களுக்கு கதை எழுதினார். அரசியல், சமூகம், நகைச்சுவை உள்ளிட்டவற்றை எழுதிய இவர், 'லெப்டோஸ் பைரோசிஸ்' எனும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தன் 44வது வயதில், 2012, ஏப்ரல் 4ல் மறைந்தார்.இசைத்து, பாடுவதிலும் புகழ் பெற்ற பத்திரிகையாளர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை