உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

மே 10, 1951திருநெல்வேலியில், சுப்பிரமணிய பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதியின் மகனாக, 1951ல் இதே நாளில் பிறந்தவர் முத்து எனும் நெல்லை சு.முத்து.இவர் வேதியியலில் பட்ட மேற்படிப்பு முடித்து, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றினார். கவிதை, கட்டுரை, கதைகள் எழுதுவதில் வல்லவர். இவரது கவிதைகளை அங்கீகரிக்கும் வகையில், மலேஷியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை, 'கவிமாமணி' விருது வழங்கியது.இவரது, 'விண்வெளி 2057, அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு, ஐன்ஸ்டீனும் அண்டவெளியும், அறிவியல் வரலாறு' ஆகிய நுால்கள் தமிழக அரசின் சிறந்த நுாலுக்கான விருதை பெற்றுள்ளன. இவர் எழுதிய, 'அறிவியல் ஆத்திசூடி' எனும் தலைப்பிலான படைப்பு, ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அறிவியல் கட்டுரைகளால் பத்திரிகை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மத்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம் விருது வழங்கியது.சொல்லாலும், செயலாலும் அறிவியல் வளர்க்கும் தமிழக விஞ்ஞானியின் 73வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ