உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

மே 11, 1978மதுரையில், பட்டு நெசவு செய்யும் சவுராஷ்டிரா குடும்பத்தில், வெங்கடாஜலபதி - பாக்கியலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1923, மார்ச் 24ல் பிறந்தவர் நரசிம்மன்.இவர், சிறுவயதிலேயே சவுராஷ்டிரா நாடக சபையில் சேர்ந்து நடித்து, 'பாரதி' பட்டம் பெற்றார். 'பாய்ஸ்' கம்பெனியில் சேர்ந்து முக்கிய வேடங்களில் நடித்தார். புளியமாநகர் பி.எஸ்.சுப்பா ரெட்டியின் நாடக கம்பெனியில் சேர்ந்து மலேஷியா, சிங்கப்பூருக்கு சென்றும் நடித்தார்.இவர், ஒன்பது படங்களில் நாயகனாக நடித்ததுடன், கிருஷ்ண விஜயம், திகம்பர சாமியார், திரும்பிப்பார், என் தங்கை, நான் கண்ட சொர்க்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். இவரது பக்கத்து வீட்டு நண்பரான டி.எம்.சவுந்தரராஜன் பாடகருக்கான வாய்ப்பு தேடிய போது, இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவிடம் சிபாரிசு செய்து பின்னணி பாடகராக்கினார். இவர் தன் 55வது வயதில், 1978ல் இதே நாளில் மறைந்தார். 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் விருப்ப நாயகன் மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ