| ADDED : மே 17, 2024 10:06 PM
மே 18, 1881திருப்பூரில், அங்கப்ப செட்டியார் - மீனாட்சி தம்பதியின் மகனாக, 1881ல், இதே நாளில் பிறந்தவர் டி.ஏ.ராமலிங்கம் செட்டியார். பருத்தி வர்த்தகரான இவரது தந்தை, இவரை மிகவும் செல்வாக்குடன் வளர்த்தார். திருப்பூரில் பள்ளிக்கல்வி, சென்னை மாநிலக் கல்லுாரியில் சட்டப் படிப்பை முடித்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, வழக்கறிஞர் குழுமத்தின் தலைவராகவும் இருந்தார். 1911ல் கூட்டுறவு இயக்கத்தில் சேர்ந்து, 'கூட்டுறவு' என்ற இதழையும் நடத்தினார். கோவையில் கூட்டுறவு பயிற்சி பள்ளி, மத்திய கூட்டுறவு வங்கி, நகர்ப்புற வங்கி, நிலவள வளர்ச்சி வங்கி, பால் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அச்சகம் உள்ளிட்டவற்றை உருவாக்கினார்.கோவை ஜில்லா போர்டு தலைவர், மாநகராட்சி தலைவராக இருந்தார். காங்கிரஸ், நீதிக்கட்சிகளில் இருந்தார். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினர், எம்.பி.,யாகவும் தேர்வானார். ஹிந்தி திணிப்பை எதிர்த்த இவர், தன் 71வது வயதில், 1952ல் மறைந்தார்.தமிழக கூட்டுறவு துறையின் தந்தை பிறந்த தினம் இன்று!