உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜூன் 4, 1941டில்லியில், வித்யாவதி மார்கன் - சாந்தி ஸ்வரூப் தம்பதியின் மகளாக, 1941ல் இதே நாளில் பிறந்தவர் தர்சன் அரங்கநாதன். டில்லி பல்கலையில் வேதியியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று, மிராண்டா கல்லுாரியில் விரிவுரையாளராக சேர்ந்து, துறை தலைவராக உயர்ந்தார். லண்டன் இம்பீரியல் கல்லுாரியில் ஆய்வு செய்து முதுமுனைவர் பட்டம் பெற்றார்.நாடு திரும்பி, கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இயற்கை கனிம பொருட்கள் சார்ந்த ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பேராசிரியராக இருந்த அரங்கநாதனை மணந்தார். இருவரும் இணைந்து உயிர் - கனிம வேதியியல் சார்ந்து ஆய்வு செய்ததுடன் பல நுால்களையும் எழுதினர். இவர், பூஞ்சை காளான் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க தேவைப்படும், 'இமிட்டாசோல்' எனும் தொகுப்பை கண்டறிந்தார்.'ஏ.வி.ராமாராவ், மூன்றாம் உலக அறிவியல்அகாடமி, சுக் தேவ் எண்டோவ்மென்ட்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2001ல், தன் 60வது வயதில் இதே நாளில் மறைந்தார்.இந்திய பெண் விஞ்ஞானி இறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை