உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜூன் 25, 2010ஈரோடு மாவட்டம், வள்ளிபுரத்தாம் பாளையத்தில், ஜெகநாதன் முதலியார் - முத்துலட்சுமி தம்பதியின் மகனாக, 1944, செப்டம்பர் 21ல் பிறந்தவர் சுத்தானந்தன் முதலியார். சென்னையில் பி.ஏ., படித்தார். இவரது தந்தை, ஈரோடெக்ஸ் எனும் ஈரோடு நெசவாளர்கூட்டுறவு சங்கத்தை துவக்கினார். தந்தை மறைந்த பின், அதன் தலைவரானார்.திருச்சி, மதுரை, சேலம் மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும், இச்சங்கத்தின் கிளைகளை திறந்து, ஏழை நெசவாளர்களின் தயாரிப்பை அதிகரித்தார். ஈரோட்டில் செங்குந்தர் பொறியியல் கல்லுாரி, எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறந்தார்.பாலியஸ்டர் நுால் தயாரிப்பதற்கான தென்மாநில பிரதிநிதியாக, மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். கைத்தறிக்கான உயர்மட்டக்குழு உறுப்பினர், நுால் விலை நிர்ணய குழு உறுப்பினர், விற்பனை வரி ஆலோசனை குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த இவர், 2010ல் தன் 66வது வயதில் இதே நாளில் மறைந்தார்.நெசவாளர்களின் நேசன் மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ