உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு: கல்வராயன்மலை மாணவி அசத்தல்

என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு: கல்வராயன்மலை மாணவி அசத்தல்

சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன்மலை, மேல்நாடு ஊராட்சி, வேலம்பட்டைச் சேர்ந்த, பழங்குடியின மாணவி சுகன்யா, 17. இவரது அண்ணன் பூபதி, 23. இவர்களது தாய் ராசம்மாள், 14 ஆண்டுகளுக்கு முன், மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து, தந்தை பூசான், மகன், மகளை விட்டு சென்று விட்டார். இதனால், பெரியப்பா லட்சுமணன், பெரியம்மாள் சின்னப்பொண்ணு ஆகியோர், சுகன்யா, பூபதியை வளர்த்து வருகின்றனர்.சுகன்யா, கரியகோவில் அரசு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் கணித உயிரியல் படித்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 412 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுதி, பழங்குடி இட ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றார். நேற்று முன்தினம் கவுன்சிலிங் மூலம், திருச்சி என்.ஐ.டி.,யில் உற்பத்தி பொறியியல் படிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்.இதுகுறித்து சுகன்யா கூறியதாவது: கல்வி மீது இருந்த ஆர்வத்தால் தினமும், 3 கி.மீ., நடந்து சென்று கரியகோவில் பள்ளியில் படித்தேன். மருத்துவர் என்பது கனவாக இருந்த நிலையில் வளர்ப்பு பெற்றோர் பெயரில் பழங்குடி ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை. பிளஸ் 2 தேர்வு எழுதும் முன் கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அப்போதைய ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா ஆய்வு செய்து ஜாதி சான்றிதழ் வழங்கினார்.தாமதமாக கிடைத்ததால், 'நீட்' தேர்வு எழுத முடியவில்லை. ஜே.இ.இ., தேர்வு எழுதி, 84 சதவீத மதிப்பெண் பெற்றதால், திருச்சி என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. என் வளர்ப்பு பெற்றோர், சகோதரர், ஆசிரியர்கள் ஊக்கத்தால், இந்த வாய்ப்பை பெற முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

vpurushothaman
ஜூலை 13, 2024 12:52

நீடூழி வாழ்க...வளருக


vpurushothaman
ஜூலை 13, 2024 12:51

நீடூழி வாழ்க...வளருக


Barakat Ali
ஜூலை 12, 2024 15:31

vaazhththukkal ..........


Mahalingam K
ஜூலை 11, 2024 01:08

ஏழ்மை நிலையில் மனநதளராமல் விடாமுயற்சியுடன் படித்து திருச்சி என் ஐடியில் சேர்ந்தமைக்கு பாராட்டி மகிழ்கிறோம். உதவிக்கு தொடர்பு கொள்ள 9486280400


THINAKAREN KARAMANI
ஜூலை 10, 2024 17:52

வாழ்க்கைக் கஷ்டங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு தேர்வில் சிறப்புடன் வென்ற மாணவிக்கு நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வளர்ப்பு அப்பா அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


Apposthalan samlin
ஜூலை 10, 2024 13:48

கடைசியில் நல்ல நிலைமையில் இருக்கும் பொது உன் அப்பா உன்னை தேடி வரும் பொழுது ஏற்று கொள்ளாதே மகளே


Maharajagadai Radhakrishnan
ஜூலை 10, 2024 12:43

காங்கிரதுலேஷன்ஸ


Mohan das GANDHI
ஜூலை 10, 2024 12:41

ஆர்.ஏ ஸ்.பாரதி திமுக போட்ட பிச்சை என்று பேசுவான்? திமுக தலித் மக்களின் விரோதிகள் அதுபோலத்தான் திருமாவளவனும் தலித் மக்களின் எதிரிகளே பாஜக திரு.அண்ணாமலை IPS மட்டுமே தலித் மக்கள், பழங்குடியினரின் பாதுகாவலர் என்பதே உண்மை.


திண்டுக்கல் சரவணன்
ஜூலை 10, 2024 11:15

வாழ்த்துக்கள், படித்து குடும்பத்தை முன்னேற்றவும். சமூக மக்களுக்கும் முடிந்த உதவிகளை செய்யவும்


ரிஷி கௌதம்
ஜூலை 10, 2024 11:04

வாழ்த்துக்கள் மேன் மேலும் உயர்ந்து தன் பணியை இல்லாத மாணவர்களின் கல்வி சிறக்க வாழ்த்துக்கள் மகளே..


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி